பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 635

அயலே விளம்பிய உரைகளைக் கேட்டு உணர்வு தெளிந்து அாசன் விழிக்கதும், முனிவரிடம் வினவியதும், அவர் ஒரு பதி லும் சொல்லாமல் உள்ளத்துயருடன் ஒதுங்கிப்போனதும், உரு வங்கள் கொண்டு நடிப்பன போல் இவற்றுள் உணர்த்தப்பட்டுள் ளன. மெய்ப்பாடுகள் வியப்பும் நயப்பும் விளைத்து கிற்கின்றன. சொல்லோவியங்களில் புதைக்கொளிர்கின்ற உள்ளுணர்ச்சிகளை ஊன்றிநோக்கி உளநிலைகளை ஒர்ந்துகொள்ளவேண்டும்.

இராமனை வனம் போகாமல் நிறுத்திவிடுகிறேன் ‘ என்று முன்னம் வசிட்டர் உறுதிகூறி யிருந்தார் ஆதலால் அவருடைய உரையால் ஒரு வேளை குமான் திரும்பி வந்திருப்பான் என கினைந்து மன்னவன் மயக்கம் தெளிந்தான். தெளியவே கண் திறந்தது ; எதிரே முனிவர் கின்றார் , அவரை இனிது நோக்கி, ‘ வீரன் வந்தானே ?” என்று போவலோடு கேட்டான். மாதவர் பேதுறலானுர் ; இல்லை ‘ என்று சொன்னுல் அரசன் உயிர் உடனே போய்விடுமே! என அவர் உள்ளம் பகைத்தார். அங்கப் பரிதாப நிலையை நேரே பார்த்து கிற்கமுடியாமல் நிலை குலைந்து தலைகவிழ்ந்து கண்ணிர் சிக்கி அயலே ஒதுங்கி அலமந்து கின்றார்.

நான் இவ் அல்லல் காண்கில்லேன் என்ன ஆண்டு நின்று, அகலப்போனுன் ‘ என்ற இதில் முனிவாது உள்ளப் பான்மை உணரவுள்ளது. பிறவுயிர்கள் வருந்து வகைக் கம் கண்ணுல் காணச் சகியாத கண்ணளியுடையவர் என்பது இதனுல் அறிய கின்றது. நி1 வ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவதே அந்தணத் கன்மையாகலால் அறவோருக்குரிய அந்த உயரிய

இயல்பு இவர்பால் மிகவும் பெருகி யிருந்த தென்க.

தமக்கு அதிக உறவுரிமையுடையவர் கொடிய துயரால் துடிக்க நேர்ந்தால் அதனை அடுத்து கின்று காணப் பெரும் பாலும் யாருக்கும் சகிக்கமுடியாதாதலால் இயற்கையான அந்த மனித சுபாவமும் இங்கே இனிதறிய வந்தது.)

தான் வினவியகற்கு ஒரு பதிலும் சொல்லாமல் முனிவர்

துனியுடன் கின்றதைக் கண்டே புதல்வன் வனம் போய்விட் டான் என்று உணர்ந்துகொண்டான் ; கொள்ளவே உள்ளம்

குலைந்தது ; உணர்விழந்து மன்னன் உயிர் மயங்கினன்.