பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 கம்பன் கலை நிலை

மாயிருந்தார். அம்மவுன நிலையில் மறுக்கமும் உருக்கமும் மருவி யிருந்தன. அம்மன நிலைகள் கனி யுணர்வுடையன.

உரிமை மிகுந்த அவ் அருமைக் காட்சியைக் கவி மிகவும் அழகாகச் சிக்கிரித்துக் காட்டியிருக்கின்றார். அடியில் வருவன

காண்க.

மந்திரிகளின் மனநிலை.

“ திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிங்தை

புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே வெருண்டு மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால் இரண்டு கன்றினுக்கு இரங்கும்ஒர் ஆவென இருந்தார்.

மறுகி இசைந்தது. அன்னர் ஆயினும் அரசனுக் கதுவல துறுதி பின்னர் இல்லெனக் கருதியும் பெருகில வரைப்பில் மன்னும் மன்னுயிர்க்கு இராமனின் மன்னவர் இல்லை என்ன வுன்னியும், விதியது வலியினும் இசைந்தார். ‘

(மங்கியப்படலம், 32, 33) இக் கவிகள் இரண்டையும் கருத்தான்றி நோக்குக. அாசன் உரையாடி முடிந்தபின், அமைச்சர் உடனே அதற் குப் பதில் சொல்லவேண்டும். அங்கனம் சொல்லமாட்டாமல் உள்ளம் கவன்று ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி மறுகலாயி ஞர். என்னே மறுக்கம் ? எனின், பின்னே பார்க்க.

அரசாட்சியைக் குமானிடம் கொடுத்துவிட்டு அரசன் ஒதுங்கி யிருக்க வேண்டுகின்றான். அவ் வேண்டுகோளுக்கு உடனே இசையின், கிழவன் ஒழியட்டும் ‘ என்று உளமகிழ் வுடன் அவர் எதிர்பார்க்கிருக்கபடி யாம் ; ஆகவே அது வேக்க லுக்கு உள்ளே சிறிது ஐயத்தையும் அவலக்கையும் விளைத்து அவமதிப்பைக் காட்டும் ; இசையாது மறுத்துவிடினே இளவாசை மதியாமல் இளிக்கபடியாய் ஈனம் பயக்கும். இக்க கரும சங்க டமான நிலையில் கருமம் கைதவருமல் உரிமையுடன் அமைச்சர் தகுதியாகப் பதில் உாைக்கவேண்டும். இடர்ப்பாடான இங்கிலை மையில் அவர் கடப்பாடாற்றியிருக்கும் காட்சியைக் கவி இங்கே மைக்கு நன்கு காட்டியிருக்கிரு.ர். தாடிக் காணவேண்டும்.