பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 665

இவ்வாறு நாயகனது நயத்தகு தன்மையை உாைத்து முடித்து முடிவில் அத்துளயவளது இயல்பான உயர்வையும் மகி மையையும் வியந்து பாராட்டினன்.

பெண் பிறந்தவர் அருந்ததியே முதற் பெருமைப் பண்பிறந்தவர்க்கு அருங்கல மாகிய பாவாய் ! என இதில் விளித் திருக்கும் விளிகிலையை விழியூன்றிப் பார்க்க பெண்ணுகப் பிறந்தவர்களுக்குள்ளே சிறந்த பதிவிாதை களாய் உயர்ந்து விளங்குகின்ற அருந்ததி முதலானவர்களும், வியந்து புகழ்ந்து திசை நோக்கிக் கொமுத்தக்க திவ்விய மகிமை யுடையவள் சீதை என்ற கல்ை அவளது தெய்வக் கற்புநிலை தெரியலாகும்.)

பண்பு இறந்தவர் என்றது குணங்களால் உயர்ந்தவர் என்ற வாறு. இறத்தல்=எல்லை கடந்து கிற்றல். | வார்த்தைகளால் வாைந்து சொல்லமுடியாத உயர்ந்த குணங்களையுடையவர் என்ப தாம். முதல் என்றது அநகுயை சாவித்திரி முதலானவர்களே. மகாபதிவிாகையான அருந்ததி முதலிய பெருங்குலக் கற். பினரெவர்க்கும் சீதை ஒர் அரிய அணிகலமாய் அழகு செய்து

கின்றாள் என்பான், ‘ அருங்கலமாகிய பாவாய் ! ’’ என்றான்.”

சீலத்திலும் ஞானத்திலும் சிறந்து ஞாலத்திலுயர்ந்துள்ள கற்புடை மாகர் எவரினும் சீதை சிறந்தவள் என்றது அவளது சீர்மை ர்ேமைகளும், பதியின் பான்மை மேன்மைகளும் அதிசய

கிலையில் அமைந்துள்ளமை கருதி.

கொடுமையான பரிசோதனைகளில் யாதொரு பழுதுமின்றி முழுதும் தேறி அவள் முதன்மை எய்தி யுள்ளமையான் பெண் பிறந்தவர்க்கெல்லாம் பெரும் புகழ்விளைத்துப் பேரழகு செய்துள் ளாள் என்க. இப்புண்ணியவதியால் பெண்ணுலகம் கண்ணியம்

மிகப் பெற்றதென்பதாம்.

(இவ்வாறு அவளது சிறப்பும் சீர்மையும் புகழ்ந்து பின்ட பிறப்பின் கீர்மை புகன்றான்.

“ உனக்கு மண் பிறந்தகம் ; நீ வான் நின்றும் வந்தாய் ! ’’

என்றது அவளுடைய பிறப்பும் இருப்பும் தெரிய வந்தது.

_*