பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 கம்பன் கலை நிலை

வாயுமற் றெனது கூறு மாருதி எனலும் மற்றாேர் காயுமற் கடங்க ளாகிக் காசினி யதனின் மீது போயிடத் துணிக்தோம் என்றார் புராரிமற்று யானே வாத சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க் கவதியுண்டோ? அருள்தரு கமலக் கண்ணன் அருள்முறை அலரு ளோனும் இருள்தரு மிடற்றி ைேனும் அமரரும் இனேயராகி மருள்தரு வனத்தில் மண்ணில் வானரராகி வந்தார் பொருள்தரும் இறைவர் தத்தம் உறைவிடம் சென்று புக்கார்.’ (திருவவதாாப்படலம், 26-20) இராமாவதாாத்துக்குத் துனேகளாகக் கேவர்கள் இங்கில வுலகத்தில் வந்து பல உருவங்களாய்ப் பிறந்திருக்க முந்துற முடிவு செய்துள்ளமை இவற்றால் அறியலாகும்.

பிாமன் சாம்புவன் ஆகவும், இந்திான் வாலியாகவும், சூரி யன் சுக்கிரீவன் ஆகவும், அக்கினி லேன் ஆகவும், வாயு அனுமான் ஆகவும், மற்றைத் தேவர்களெல்லாரும் ஒருங்கே குரங்குகளாக வும் உள்ளங்துணிந்து உதிக்க நேர்ந்தனர்.

அமார்களே நோக்கி முதலில் பிரமாவே உறுதி செய்தார் ஆதலால் எண்கின் வேங்கன் யான் என முன்னரே மொழிகின் முன் ‘ என்றார். பிதாமகன் =பிாமன். எண்கு=காடி. சாம் புவன் காடிகளுக்குக் தலைவன் ஆகலான் ‘ எண்கின் வேங்கன் ‘ என கின்றான்.

(திருவுடைக் கடவுள் வேங்கன் என்றது இந்திரனை. கற்பக கருக்களை யுடையவன் என்பதாம். அரி=அக்கினி கேவன்.

இங்கனம் எல்லாரும் சொல்லி முடித்தபின் முடிவில் கண் லுதல் பாமனும், ‘ என்னுடைய அமிசம் வாயு குமா கிைய அனுமனிடம் மன்னியிருக்கும்” என்று இன்னருள் புரிந்தார்.

திரிபுரத்தை எரித்து அழித்தவன் ஆதலால் புராரி என கின்றான். சிவபெருமானுக்கு உரிய வேறு பெயர்களுள் ஒன் றையும் கூருது இந்தப் பெயரை இங்கே குறித்தது உக்கிர வீா மூர்த்தியாய் உறுதி பூண்டு கின்ற பருவ நிலை தெரிய என்க. நெற்றித் தீயால் கிருதர் புரத்தை எரித்த சீர்மையே கொற்ற அனுமன்பால் கூடியிருந்த தென்பதாம். ஆகவே ஊரில் தீவைக் கும் பேர்வழி என்பது உனா கின்றது. பின்பு நிகழவிருக்கும் இலங்கா தகனத்துக்கு இங்கேயே அடிகோலி வைத்க படியிது.