பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் S33

கள் தம் அருகு வந்து முகமலர்ந்து இராமன் அன்புரையாடிய பொழுது உள்ளமும் உயிரும் குளிர்ந்து இன்பமீதுார்ந்து பாவச மாயினர் ; அதன் பின் பகில் மொழி கூறினர். பகிலிலுள்ள மதிநலமும் விசயமும் அதிசயமாயுள்ளன.

மேனேவிமக்கள் நலமா ? வாழ்க்கை இனிது நடந்துவருகின் றதா ? என்பன முதலாக முன்பு உசாவிய வினுக்களுக்கெல்லாம் L) ! அஃது என ஒரு மொழியி லேயே பதில் தந்தனர். இாாமன் முன்னம் வினவிய நிலைகளையெல்லாம் இச்சுட்டு தொட்டு கின் றது. அஃது என்ற த அப்படியே என்றவாறு.)

அாசகுலகிலகமே s சமுகம் உசாவியபடியே தொழில்கள் வழுவாமல் வருவாயுடன் வளர்ந்து வருகின்றன ; மனே இனித மக்கள் வலியர், ஒக்கலும் கிளைஞரும் உவந்து வருகின்றனர்; இடர் யாகொன்றும் இல்லை ; யாண்டும் இன்பமாய் நாங்கள் வாழ்ந்து வருகின்றாேம் என்பார், “ அஃது ‘ என்றார்.

இவன் சங்கிதியில் அதிகமாகப் பேசுதல் உசிதமன்றென்று கருதி மரியாதையுடன் ஒரே வார்க்கையில் பதில் உாைத்தார். உாைத்தவர் மேலும் கம் உறுதியை வலியுறுக்கினர்.

- தேவரீரை அாசனகப் பெற்றுள்ள எங்களுக்கு வேறு என்ன

தேவை ? யாதொரு குறையும் என்றும் வராது ; இகலோக சுக போகங்களெல்லாம் ஒருங்கே வாய்ந்து உவந்து வாழ்ந்து வருத லாகிய இது ஒரு பெரிதா ? பரமபதமடையும் பாக்கியமும் எமக்கு உரிமையாக உண்டு என்பார், கிகின எமது அாசு என உடையேம் ; இஃது ஒரு பொருள் அல’ என்றார் உன்னைத் தலைவனுகப் பெற்றிருக்கிற எங்கள் உயர் கிலேமையை எவரும் கிலையிடலரிதென்பதாம்.

இங்ானம் சொன்னவர் பின்பு அன்பு மீறி அவசமுடன் பேசலாயினர். எங்கள் உயிரும் ஏழு லகங்களும் பிரம கற்பம் வரையும் உன் குடி உடைமைகளாகப் படியமைத்திருக்க வேண் டும் எனத் தொழுதகையாாய் உழுவலன்புடன் உவந்து வாழ்த் தினர் உள்ளம் உருகினமையால் உரைகள் உயர்நிலையில் துள்ளி யெழு தன.

மலரோன் உகுபகல் அளவும் உறுக

105