பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1132 கம்பன் கலை நிலை

என்று தெரிகிறது. அதன் ஆற்றலும் பெருமையும் செய்வத் தன்மையோடு செறிந்து எண்ணுந்தோறும் இறம்பூது விளைத்து வருகின்றன.

வில்லின் வருகை இங்கே அதிசய நிலையில் துதிசெய்யப் பட்டுள்ளது. அறுபதியிைார் என்றது உயர்வு கவிற்சி யாகக் தோன்றுகிறது. இந்தத் தொகை இக்காவியத்தில் ஒரு மங்கல மரபாக அங்கங்கே குறிக்கப்பட்டு வருகிறது.

எட்டுச் சக்கரங்களையுடைய ஒரு பெட்டி வண்டியில் இவ் வில்லை வைத்து ஐயாயியம் பேர் ஈர்த்துக்கொண்டு வங்கதாக வால்மீகர் சொல்லி யிருக்கிரு.ர்.

கம்பர் இங்கே அறுபதியிைார் என்கின் ருர் வில்லுக்கு மகிமை தர ஆளே அதிகப்படுக்கி யிருக்கிறார் என்ற சொல்ல நேர்கின்றாேம். ஆயினும், மூல நூலில் சொல்லியுள்ள படியே தாமும் சொல்லியிருப்பதாகக் குறிக்க தொகை பொருக்கமுற அமைந்துள்ளது. என்னே ? அறுபதியிைரம் என்பது சம பாகியா அறுபட்ட பதியிைரம் எனப் பிரித்து ஐயாயிரம் எனக் கருத கின்றது.

கவி கருதியோ கருதாமலோ ஈண்டு இவ்வாறு இசைவாக இது மருவி யுள்ளது. அரிய பொருள்களை உலகம் வியந்து போற் றும்படி பெருமித கிலையில் கவிகள் புனேத்து கூறுவது மரபு.

இக்காலத்தில் ஒரு யத் திாக்கைக் குறித்துக் கூறுங்கால் அது அறுபது குதிரைகளுடைய ஆற்றல் அமைந்தது என்று சாற்றுவதுபோல வில்லையும் இங்கே போற்றிக் கொள்க.

கோள்வலம் கிறைந்த அறுபதியிைாம் ஆள் வலி கொண்டது

அப்பாாவில் என்று பாராட்டிய படி யாம்.

இத்தகைய பெருவில்லை ஆயுதசாலையிலிருந்து அரசவைக்குக் தாக்கி வருதலை அறிந்ததும் நகரிலுள்ள மாங்கர் பலர் வியக்தி வெளி வந்தார். இதுவரை வெளி யேருத அதனேக் கண்டதும் ஆண்களும் பெண்களும் அதிசயமுடன் த கிசெய்து பேசினர். அந்த உரையாடல்கள் அவ்வில்லின் பெருமையை விளக்கிப் பொதுமக்களின் மதி நலங்களை வெளிப்படுத்தி உரிமை சுரக் துள்ளன. சில மொழிகளை இங்கே கண்டு செல்வோம்.