பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1384 கம்பன் கலை நிலை

யானது ஆதலால் அது வெறும் நிறப்பொலிவுக்கு மாத்திசம் ஒப்பாம். ஆகவே அதனினும் அருமையும் பெருமையுமுடைய பவளம் உரிமையாய் வந்தது.

சிலவாய்கள் சிந்து ம் போலவும், பவளம் போலவும் சிவந்து வெளியே அழகாய்த் தோன்றும் ; உள்ளே கோள் பேசல், கொடு மொழி கூறல், பொய்யுாைத்தல் முதலிய ஈனங்கள் படிந்து கொடுவாய்களா யிருக்கும். இந்த வாய் யாதொரு புன்மையு மின்றி எல்லா நன்மைகளும் கிறைந்து செம்மையும் சீலமும் சிறந்து சீர்மை கனிந்து இருத்தலால் செவ்வாய் என வங்தது.

இத்தகைய புனிதவாயை வலதுகையால் புதைத்து இடது கையால் ஆடையை ஒதுக்கி உடல் துவண்டு கின்றான். துவளல் = குழைதல். கானே= உடை. வாய்பொத்துதல் தானே மடக்குதல் மரியாதையின் பெரிய அறிகுறிகள் ஆதலால் உரியவனது அன்பும்

பணிவும் உணா வந்தன.

அந்திவந்து அடைந்த தாயைக் கண்ட ஆன்கன்றின் அன்ன்ை

முக்தி உாைக் கன எல்லாம் புறகிலைகளைக் குறித்தன ; இது அகநிலையை விளக்கியது. உள்ளன்பு உணர்வு சாங்துள்ளது.

தாயப் பசு வெளியே மேய்ச்சலுக்குச் சென்றிருந்தது. கன்று விட்டில் தங்கிகின்றது. பகல் முழுவதும் தாயைக் கான மையாலும், பசியினுலும் மறுகி யிருந்த இளங்கன்று மாலையில் விட்டுக்கு வந்த தன் தாயைக் கண்டவுடன் எப்படி உள்ளம் களித்துத் துள்ளி ஒடி அதனை அடைந்து உவகை மிகுந்து உருகி கிற்குமோ, அந்த அன்பும் ஆனந்தமும் கைகேசியைக் கண்ட போது இராமனுக்கு உண்டாயின.

o மேயப் போன தாய் அக்தி வந்தபோது அதனே எதிர் ஒடி விழைத்து கண்ட கன்றை இணைத்துக் காட்டி அன்புக் காட்சியை இங்ஙனம் இன்புற விளக்கியிருக்கிறார். அதிகாலையில் நிகழ்ந்துள்ள இக்கச் சக்திப்பில் அங்கிவந்து புகுந்தது விந்தையானது. வி விளைவு எங்க வகையிலும் முக்தி வருகின்றது.) -

o

கலியானம் ஆகி நல்ல காளைப் பருவத்தனயுள்ள இராமனை இங்கே இளங்கன்று என்று குறித்தது, கள்ளம் கபடு: யாதும் இன்றி உள்ளன்பு சுரங்து உல்லாசமாயுள்ள உரிமை கருதி.