பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1387

தனி மகிமை யுடையதாய்ப் புனிதமாயது என இக் குலமகன் மனம் மிக மகிழ்ந்துள்ளான்.

அவளுடைய ஏவல் இன்னது என்று தெரியு முன்னரே இவ னது ஆவல் இன்னவாறு பெருகி எழுந்தது.

அடியேன் என்று கைகேசி முன்னிலையில் சொன்னது போல் வேறு யாரிடமும் இவ்வளவு எளிமையாக இராமன் பேச வில்லை.

‘அஞ்சன வண்ண கின் அடியம் யாம்’ என வானவரும் மானவரும் வாழ்த்த கின்ற ஆண்டவன் ஈண்டு அடியன் என கின்று படி யறிய கடிக்கின்றான். கடிப்பெல்லாம் கொடியவள் எதிரே இனிமையுடன் குலாவி கிற்கின்றன.

அடிமையில் ஒரு மோகம் ஆண்டவனுக்குப் புதுமையாய் அமைந்திருக்கிறது. எவ்வழியும் என்றும் தனக்குக் கிடையாதது ஆதலால் அதில் இவ்வளவு ஆவல் வந்தது. பிறர் வாயில்ை இவ் வாறு எவ்வாற்றானும் பேசக் கிடையாமையால் தன் வாயின

லாவது சொல்லி இங்ாவனம் உள்ளம் உவந்தான்.

சாதியிலும் சக்கரவர்த்திக் கிருமகன்; ஆதிமூல நிலையிலும் வேதமூலம் அறியாதவன்; அவன் மாது ஒருத்தியின் பாதமூலம் பணிந்து பணி மொழி பகர்ந்து தனது சாதனைக்குச் சாதகமான போதனையை எதிர் பார்த்து கின்றது போதம் கனிந்துள்ளது.

என்னின் பிறந்தவர் உளாே? என வியந்து வினவியது கயத்து காணத்தக்கது. பெற்றாேர் இட்ட பணியைப் பிழையாது செய்யும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றமையால் தன் பிறப்பின் பெருமையைச் சிறப்பித்துப் பேசினன்.

பிள்ளைகளாய்ப் பிறந்தவர்களுள் தன்னினும் சிறந்தவர் எவ ரும் இலர் என உளம் உவந்து ஒரு நோக்கில் அவன் சொல்லியிருப் பினும், உண்மை கோக்கையும் அஃது உணர்த்தியுள்ளது.

தன் பிறப்பின்பயன் இங்கே சிறப்படைய வங்துள்ளமையால்

நேர்மையாக உரைகளில் ஒலித்தன.

அதன் சீர்மையும் ர்ேமையும்

இராமனைப் போல் உலகம் உய்யப் பிறந்தவர் ஒருவரும்

இலர் என்பது தொனிக் குறிப்பில்ை தனித்துணா வந்தது.