பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 1393

எனக் கிருமாலே இளம்பெரு வழுதி குறித்துள்ளதும் ஈண்டு உளங் கொளத் தக்கது. புலவரை அறியாப் புகழ்=அறிவு எல்லை யால் அறிய முடியாத கீர்த்தி

யாரும் சேப்பரும் குனத்து இராமன் என்ற த யாராலும் அளந்து சொல்ல முடியாத குணகனங்களே புடைய குலமகன் என்றவாறு முனிவர் அமார் முதலிய எத்தகைய மேன்மையாள ாலும் இவனது பான்மையை அளந்து கூற இயலாது என்பார் *யாரும்’ என்றார், யாரிடமும் பாண்டும் காணமுடியாக திவ்விய குணசீலங்கள் யாவும் ஒருங்கு கிறைந்துள்ள பெரிய அமுதக்கடல் ஆதலால் அளவு காண்டல் யார்க்கும் அசிய காயது. -

“யாரும் ஒர் சிலைமையன் என அறிவரிய எம்பெருமான்’

(திருவாய் மொழி) என்றபடி என் பெருமையை எவரும் எல்லே காணுகவாறு இாமன் இயல் உயர்த் துள்ளமையன் செப்பருங் குணத்தன் என இப்படி ஒரு ஒப்பரும் பெயரை உடையகுயின்ை.

இவ்வாறு ஒப்பற்ற குணசீலனை இவன் கைகேசி சொல்லேக் கேட்ட அப் பொழுது அடைத்த கிலேயைக் கவி ஒர் ஒப்பனேயால் உணர்த்தியிருக்கிரு.ரி.

நீ மணிமுடி திறந்து பதினுலு வருடம் காட்டில் போப் வாழ வேண்டும் என்று தாய் என்னும் அப் பேய் சொன்ன பொழுது இச் சேய் உள்ளம் களித்த உவகை மீக்கூர்ந்தான். அகத்தில் பொங்கி எழுத்த அவ்வுவகை ஒளி முகத்தில் பொலித்து, விளங்கியது. அவ்விளக்கத்தை இப்பொழுது கினைத்தாலும் வியப் பும் விம்மிகமும் விளக்து பெருகுகின்றன.

அப்பொழுது அலர்ந்த சேந்தாமரையினை வென்றது அம்மா! : என அந்தத் திருமுகச் செவ்வியைக் கவி இப்படி விளக்கியுள்ளா எப்பொழுதும் தாமரை மல ைஒத்திருக்க முகம் அப்பொழுது அதிசயமான ஒரு புதிய மலர்ச்சியைப் பெற்று விளங்கியது.

முன்னும் பின்னும் அம்மலர் இம் முகத்திற்கு ஒப்பதாய் இருந்தது. கைகேசி சொன்ன அந்த வார்த்தையைக் கேட்ட அச் சமயத்தில் அத்தாமரை மலர் ஒப்பிழந்து இழித்தது என்பாரி வென்றது” என்றார். அம்மா! என்றது அதிசய மிகுதியால் கம் மை மறத்து வியத்து பேசி யுள்ளமையை வெளிப்படுத்தி கின்றது.

175