பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1398 கம்பன் கலை நிலை

1 என். பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றாே ?’ கம்பியின்பால் இந்த அண்ணல் கொண்டுள்ள உள்ளப் பாசமும் உரிமை நேசமும் இங்கே உணர்ச்சி கம்பி உவகை காந்து உருக்க மீதுார்த்து ஒளிர்கின்றன.

தன் மகனுக்கு வேண்டும் என்ற ஆவலால் அாசைக்கைகேசி வலிந்து கவர்ந்து கொண்டாள் ; அதனே இழந்து கின்ற அண் ணன் இங்கனம் உவந்து பேசியிருக்கிருன் என் தம்பி பெற்ற செல்வம் தான் பெற்றது அன்றாே என்றது எவ்வளவு பெருங் தன்மை : எத்துணே அன்புரிமை சகோகா வாஞ்சை மன்பதை க்கு இன்பமாய் ஈண்டு மருவியுள்ளது. அடியனேன் பெற்றதே என் பின்னவன் பெற்றது என முன்னவன் சொன்னபடியே அன்னவனும் மன்னவன் ஆகாமல் மாவுரி கரிக்க நேர்வதையும் உறவுரிமையாக உள்ளே உரை உணர்த்தி கின்றது.

தனக்கு நேர்க்க பெரிய அரச பதவியை மாற்றாங்காய் கொடுமையாகக் கவர்ந்து கன் பிள்ளைக்குச் சேர்த்த பொழுது இக் குலமகன் உள்ளம் யாதும் கிரியாமல் கம்பி என்று கழுவி அன்புரிமை செய்தது மனித இயல்பைக் கடந்து புனித வுயர்வு கனிந்து எண்ணுக்கோ.லும் இனிமை புரிக்கருள்கின்றது.

தன் பதவிக்கு இடையூருக நேர்க்கானே ! என்று எண்ண வேண்டிய இடம் இது ; அங்கனம் யாதும் எண்ணுமையோடு தம்பி மீது ஆர்வமீதுணர்ந்திருக்கிருன். இங்கம்பியின் குண நலங் கள் அமிர்க மயமாய் இனித்து கமர்களுக்கு உணர்வு நலம் உதவி வருகின்றன. |

இப்பணி தலைமேல் கொண்டேன் ‘ என்றது கைகேசி இட்ட கட்டளையைச் சிாமேல் கொண்டு செய்வதாக இராமன் உறுதி கூறியவாரும் அவளது எவலைச் செய்ய இவன் ஆவல் கொண்டுள்ளமையை இவ்வாறு விதயமாக உணர்த்தின்ை.

கானம் இன்றே போகின்றேன் ; விடையும் கொண்டேன்.

கைகேசியை நோக்கி இறுதியில் கூறிய படி இது. தன் உத்தரவுப்படி நடந்துகொள்வதாக இசைந்தான். அதனை எப் பொழுது செய்வான் ? என்று அவள் எண்ண நேரும் ஆதலால் இவ்வண்ணம் விாைந்து மொழித்தான்.