பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1399

அம்மா ! தாங்கள் பணித்தபடியே இப்பொழுதே காட்டு க்குப் போகின்றேன் ; இதோ விடை பெற்றுக்கொண்டேன் ” என்று இாண்டு கைகளையும் கலைமேல் கூப்பிக் கொழுது பின்பு தசர்தன் இருக்கும் திசையை நோக்கி வணங்கி கின்று அப்பா இடம் சொல்லியருளுங்கள் ‘ என மெல்லிய மொழி பயிற்றிப் பணிவுடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான்.

கோசலையிடம் வந்தது.

இக்குலமகன் அன்று வக்க பரிபவ கிலையைக் கண்டு கரும தேவதை கண்ணிர் சொரிந்தது. தனது கரும நிலையைக் கருதிக் கொண்டு கோசலை மாளிகை நோக்கி வந்தான். பெற்ற தாயிடம் உற்றதைச் சொல்வி விடை பெற்றுப் போக விழைந்து நூழைக் தான். தன் அருமைத் திருமகன் மணிமுடி குடும் கோலத்துடன் தன்னைக் கண்டு கொள்ள வருவான் வருவான் என்று வழிமேல் விழி வைத்துப் போவலோடு அத் தாய் எதிர்பார்த்திருந்தாள். அந்த கிலையில் இந்தச் சுங் கான் புகுத்தான். அாச ஆடம்பரங்கள் யாதொன்றும் இன்றி வெறுமையாய்க் கனியே வருகின்ற தனது அருமை மகனைக் கண்டதும் அவள் உள்ளம் கலங்கி உம்றதை வினவினுள். இவ்வள்ளல் எல்லாவற்றையும் வியமாகச் சொல்லி குன். அத் தாய் செஞ்சம் துடித்து கெடுத்துயர் அடைக்கதும், அவளை ஆற்றித் தேற்றி இச் சேய் அயல் அகன்றதும் செயல் நிகழ்ந்ததும் முதலியகிலைகள் யாவும் முன்னம் கூறப் பட்டுள்ளன. *அவற்றை ஈண்டுக் கொடர்ந்து நோக்கிக் கொள்க.

நகரம் அடைந்த துயரம்.

தனது அருமைத் காயை உரிமையுடன் போற்றி நிறுத்தி விட்டுச் சிறிய காயாகிய சுமித்திசை மாளிகையை நோக்கி இரா மன் வந்தான். வரு முன்னரே ஊருக்கு எல்லாம் உண்மை தெரிந்து விட்டது. கோசலை மாளிகையிலிருந்து எழுத்த அழுகை ஒலிகள் விழாவை எதிர் நோக்கி மணிமண்டபத்தின் முன் பாகக் குழுமி யிருந்த அரச குழாங்களின் செவிகளில் பட்டன. படவே நெஞ்சத் திகில்கள் நீண்டு எழுந்தன. அவ்வமயம் கைகேசி அாண் மனையிலிருந்த கடுந்துயருடன் வெளி வந்த வசிட்ட ைவளேக்க

  • இத்தால் பக்கம் 7.09 முதல் பார்க்க.