பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1403

பிள்ளையைப் பிரிய நேர்ந்ததாகவே கருதி கொங்தனர் என்பது தெரிய வங்தது.

இாாமனிடம் கங்தை பூண்டிருந்த உள்ளப்பாசம் எல்லாரு டைய உள்ளங்களிலும் தழைத்து ஒங்கியிருந்தது. இந்த விளக்க மும் குறிப்பும் விழைந்து நோக்கத் தக்கன.

கண் உற்றவாரி கடல் உற்றது; எம்மருங்கும் அழுத ஓசை விண் உற்றது. என்னும்இது அல்லல்களின் எல்லைகளை எண்ணுற்று அறிய வந்தது.

கண்ணிர் வெள்ளமாய்ப் பெருகிக் கடலை அடைந்தது; அழு கைஒலி விண்ணேப் பிளந்தது என்றமையால் விளைந்த துன்பங்களை உணர்ந்து கொள்ளலாம். இடங்கள் தோறும் அழுகையும் அலற அலும் அவலமும் ஒலமும் பரிதாபமாய்க் கிளர்ந்து எழுந்தன ஆதலால் எம்மருங்கும்’ என அவ் வெம்மையின் விரிவையும் விதங்களையும் விளக்கினர்.

உயிரினங்கள் பட்ட துயரினங்களைத் தனித்தனியே சுருக்க மாகச் சுட்டியிருக்கிருள். உயிரில் பொருள்களும் துயரில் மூழ்கின என்றமையால் உரிய பொருளின் இயலுணா வந்தது.

வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் கிள்ளைகள் அழுதன; பூவைகள் அழுதன; பூனைகள் அழுதன; பிள்ளைகள் அழுதன; உள்ளங்கள் உருகின; பசுக்கள் கதறின; கன்றுகள் அலறின; பூக்கள் வாடின; புள்ளுகள் புலம்பின; யானைகள் பிளிறின; குதியைகள் குழரின; கருக்கள் கவித்தன; பகுத்தறிவு இல்லாக யாவும் அழு தன என்றால் அறிவுடைய மனிதர் அழுதனர் என நான் மொழிய நேர்ந்தது முழுதும் மூட மாம் எனக் கவி ஒரு அழுகை இங்கே அழுகிருக்கிரு.ர்.

சராசரங்கள் எல்லாம் இங்கனம் கவித்துத் துடித்தன என் றமையால் இராமனது ககவும் தன்மையும் அறியலாகும்.

கைகேசியும் கூனியும் தவிா மற்றவர் எல்லாரும் உள்ளம் துடித்து உயிர் பதைக்துக் கண்ணிர் வெள்ளமாய்ப் பெருகி ஒட உருகி அழுது ஒலமிட்டு மறுகிப் புரண்டார்.

தேர்களும் யானைகளும் குதிசைகளும் ஒடி எங்கும் செல்வ வளங்கள் கொழித்து மங்கலங்கள் பொங்கி இன் பக் காட்சிகள்