பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1409

இராமனுக்கு உரிய இனிய அரசை வஞ்சித்துக் கவர்ந்து கைகேசி தன் மகனுக்குக் கொடுக்க நேர்ந்ததைக் கடுத்துச் சுட்டி இலக்குவன் இப்படிக் கொதித்துத் திட்டி யிருக்கிருன்.

இராமனைச் சிங்கக் குருளே என்றது அருந்திறலாண்மையும் பெருங்தகைமையும் கருதி. குருளை=குட்டி. வஞ்சம் அறியாத நெஞ்சமும், அஞ்சாமையும் இளமைநலமும் தெரியவந்தது. .

அரசர்க்குச் சிங்கத்தை உவமை கூறுவது மேல்நாட்டு இலக் கியத்திலும் வழக்கமாயுள்ளது.

“We are two lions litter'd in one day, And I the elder and more terrible. ” (Julius Caesar, 2-2)

‘ஒரே நாளையில் பிறந்த இாண்டு சிங்கக் குட்டிகளில் கான் மூத்தவன்; ஆற்றல் மிக்கவன்.” மன்னன் தன்னைக் குறித்துச் சொல்லியுள்ளான்.

எனச் சீசர் என்னும் உரோமாபுரி

அரசபதவியைத் தீஞ் சுவை ஊன் என்று குறித்தது அதன் செழுமையும், கொழுமையும், இனிமையும் நோக்கி. இளவாசை அளியேறு என்றமையால் அதற்கு ஏற்ப அரசுரிமை உருவகிக்க வந்தது. சத்திரியத் தன்மை உய்த்துணா நேர்ந்தது.

நாயின் குட்டி என்றது பாதனைச் சுட்டியது. பெற்றதாய் செய்த பிழையால் அங்த உத்தமன் இப்படிப் பழிக்கப்பட்டான் ஒரு தங்கைக்குப் பிறந்த பிள்ளைகள்; ஒன்று சிங்கக் குட்டி என கின்றது. மற்று ஒன்று காய்க் குட்டி ஆயது. இது எப்படிப் பொருந்தும்? அப்படியாயின், இப்படிச் சொன்ன இந்தக் குட்டி எந்தவகையைச் சேர்ந்தது? இவ்விசித்திர வேறுபாடு எவ்வாறு நேர்ந்தது? இதனைக் கொஞ்சம் சிந்தனை செய்ய வேண்டும்.

--- இம் மாறுபாடு பாத்திரபேதத்தால் என்பது ஆத்திரத்தோே துணுக்கமாக உணர்த்தப்பட்டது.

தசரதன் என்னும் சிங்க ஏற்றுக்குக் கோசலையான சிங்கப் பேடு தகுதியாக இசைக்கிருந்தது. அதன் வயிற்றில் பிறந்தது சரி யான சிங்கக் குருளையாய் வந்தது.

இறுதியில் பேய் என வந்த அந்தத்தாயின் வயிற்றில் பிறந்த மையால் சிறந்த தாயவன் காயின் குட்டி என நேர்ந்தான்.

177