பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1412 கம்பன் கலை நிலை

உண்மை.கிலை உள்ளே ஒளிவிட்டு மிளிர்கின்றது. பாமனது ஒர் அமிசம் என்பதை உயை உணர்த்திகின்றது.

இராமன் இலக்குவனை ஆற்றியது. இங்ானம் கொடிய கோபாவேசத்துடன் நகர் நடுவே கின்று இலக்குவன் விரவாதங்கூறி ஆரவாரம் செய்தான். போருக்கு அறை கூவிய அப்பேரொலி இராமன் காகில் விழுந்தது. சுமித்தி ாையிடம் விடைபெறச் சென்றிருந்த அக் கோமகன் தம்பியை கோக்கி விாைந்து வந்தான்.

அக் குலமகன் வந்ததும், இளவலைக் கண்டதும், உளம் மறுகி உரைகள் பகர்ந்ததும் உழுவலன்பும் கெழுதகைமையும் தழுவியுள்ளன.

இராமன் வந்த நிலை

வீருக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம் மின்ன மாருத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வங்தான் கால்தாக்க கிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆருக்கனல் ஆற்றும் ஒர் அஞ்சனக் குன்றம் என்ன. (1)

தம்பியை வினவிய முறை

மின்னொத்த சிற்றக் கனல் விட்டு விளங்க கின்ற பொன்ஒத்த மேனிப் புயல்ஒத்த தடக்கை யானே என் அத்த என் இறையேனும் முனிங்திலா தாய் சன்னத்த கிைத் தனு ஏங்துதற்கு ஏது? என்றான். (2)

இளையவன் இசைத்தது

மெய்யைச் சிதைவித்து கின் மேன் முறை நீத்த நெஞ்சம் மையிற் கரியாள் எதிர் கின்னே கன் மெளலி சூட்டல் செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவ ரேனும் துய்யைச் சுடுவெங் கன லிற் சுடுவான் துணிந்தேன். (3)

வலக்கார் முகம்என் கையதாக வானு ளோரும் விலக்கார்; அவர் வங்து விலக்கினும் என்கை வாளிக்கு இலக்கா எரிவித்து உலகேழிைெடு ஏழும் மன்னர் குலக்காவலும் இன்று உனக்கு யான்தரக் கோடி என்றான்.