பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1420 கம்பன் கலை நிலை

‘ஆராத குடருடைமை ஆரமிர்தின் குற்றமோ? ஏரியங்கு இல்லாமை எழிலியின் குற்றமோ? காரரும்பு மலராமை காய் கதிரோன் குற்றமோ? தே ராதான் உணராமை தெளிவுடையோன் குற்றமோ?”

(நீலகேசி-உrை) புனல் இன்மை நதியின் பிழை அன்று என்ற கம் கவி யோடு ஒருவகையில் இது ஒத்துள்ளது. பொருள் கிலைகளை உய்த்துணர்க. செங்கோல் எங்கி அரசு ஆளாமல் வில் எங்கி வெளியே போம்படி விதியே என்னே எவி யுள்ளது என அகி மேதையான இராமன் இங்கே கூறியுள்ளதில் பல குறிப்புக்கள் உள்ளன. என் விதி என்னுமல் பொதுவாகக் கூறி யுள்ளமையால் அது பொது மையாய் கின்றது.

யாருடைய விதி ஈண்டு கோடைய நேர்ந்தது? இராவணனது விதியே இங்கு நன்கு மூண்டு வேலை செய்து ள்ளது. கூனி கோள் சொல்ல எழுந்த பொழுதே இன்னல் செய் இராவணன் இழைக்க தீமை” என அவள் குறிக்க நேர்ந்தாள். அங்கத் தீவினை இந்தக் கோவினை அழைத்தது.

எங்க விதியை மேற்கொண்டு இராமன் ஈண்டு வந்துள்ளானே அந்த விதி மங்கி மறையாய் முந்துற மூண்டு கின்றது.

மனிதன் அடைகின்ற அனுபவங்களுக் கெல்லாம் விதியே காரணம்; அதன்படியே யாவும் நடைபெறும்; அதனை மீறி யா ரும் வேறு செய்ய முடியாது என்பன இங்கே விளங்கி கின்றன. இங்ஙனம் விதி வலியைக் குறித்துக் கூறி அமைதியுறும்படி இராமன் அறிவுறுத்தவே இலக்குவன் மீண்டும் கொதிக் கான். “என் ஐயனே! கங்களுக்கு இடர் செய்ய ஒரு விதியும் இடை எழுந்ததா? அப்படியாயின், அக்க விதியையும் அடியோடு தொலைத்து உங்களுக்கு நான் முடி சூட்டுகின்றேன்’ என்று முனைந்து துடித்தான்.

உதிக்கும் உலேயுள் உறுதி என ஊதை பொங்கக் கொதிக்கும் மனம் எங்கனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள் மதிக்கும் மதியாய் முதல் வானவர்க்கும் வலி இதாம் விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்டி! என்றான் (நகர் நீங்கு படலம், 134)