பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன் 1441

இருவரும் தொழுதனர் இரண்டு கன்றுஒரீஇ வெருவரும் ஆவினில் தாயும் விம்மிள்ை பொருவரும் குமரரும் போயினர் புறம் திருவரைத் துகில்ஒரீஇச் சீரை சாத்தியே. (நகர் சீக்கு 152) மக்கள் இருவரும் கொழுது வெளிவரவே சுமித்திாை அங்கே உருகிகின்ற நிலையை இங்கே உணர்ந்து இாங்குகின்றாேம். ஒருவுதல்=நீங்குதல். வெருவுதல்=உயிர்பதைத்து அஞ்சுதல். ஈன்ற தனது இளங்கன்றைப் பிரிய நேர்ந்தபோது பனி தபித்து அலமருகின்ற பசு ஈண்டு சுமித்திாைக்கு உவமையாய் வந்தது.

வாய் பேசமுடியாமல் கண்கலங்கிப் பரிந்து பதைத்திருக்கும் அப் பரிபவ கிலைகளை வெருவரும் ஆ ‘ என்னும் ஒரு மொழி, யால் தெளிவுற உணர்த்தி யருளினர். o கன்று பிரி காராவின் துயருடைய கொடி எனக் கோசலையை * முன்னம் குறித்தார். இரண்டு கன்று ஒரீஇ வெருவரும் ஆ எனச் சமிக்கிாையை ஈண்டு உாைத்தார். இரண்டுக்கும் உள்ள வேற் மறுமையை உரிமையுடன் துருவி நோக்குக.

ஒருகன்றைப் பிரிந்த பசுவின் துயரிலும், இாண்டு கன்றுகளே இழந்த ஆவின் துயரம் அதிகம் ஆதலால் பரிதாப நிலை இங்கே பெரிதாய் எழுத்தது. பெரியதாயுடைய அஎன்பத்தினும் சிறியதா யது பெரிய தாயது.

அன்புத்தாய் இங்ானம் துன்புழந்து கிற்க அச்சேயர் இரு வரும் வாயிலைக் கடந்தனர். பொருவரும் குமரர் என்றது உலகில் தலைசிறந்து கிற்கும் அவரது கிலேமை தெரியவந்தது. பொருவு கூ ஒப்பு. விாம் கொடை சீலம் முதலியவற்றில் யாரும் கிகர் இல்லாத அரசிளங் குமார்கள் ஊரைவிட்டுப் போக உள்ளம் துணிந்தனர்.

இராமன் மரவுரி தரித்தது. இராமன் வெளிவந்தவுடனே மாளிகை அயல்கின்று தான் உடுத்தி யிருந்த பட்டாடையை அவிழ்த்து ஒதுக்கிக் கைகேசி அனுப்பியிருந்த காசாய உடையை அணிந்து கொண்டான். சுமித் திரை எதிரே உடுத்திகுல் அவள் உள்ளங் துடித்து அல.ணுவாள் என்று கருதி அயல் அடைந்தபின் இச்செயல் செய்ய நேர்த்தான்.

  • இந்துளல் பக்கம் 770. வரி 31 பார்க்க.

181