பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1446 கம்பன் கலை நிலை

சீதையைத் தாய் ஆக கினேந்து போற்றுக எனத் தன் அன்னை முன்னம் தனக்கு அறிவுறுத்தியதும், அன்னவாறே பின் னவனும் உறுதி பூண்டு உரிமைபுரிந்து வருவதும் துணுகி யுனா உரியன:

மீன், இலக்குவனுக்கும்; நீ ல ம், சீதைக்கும் ஒப்பாம். ஆகவே இராமன் இனிய நீர் கிலையமாய் கிலவலாயினன்.

நீலம் என்பது நீர்ப்பூ. மெல்லிய இதழ்கள் அமைந்தது நல்ல வாசம் உடையது. சிறந்த சுனைநீரில் மலர்ந்து திகழ்வது.

‘சனேய நீலமும் கள்ளியும் சூழ்மலர் : (சிந்தாமணி 1608)

‘கூலப் பொய்கையுள் நீலம் ஒடு மல்ர்ங் த (பெருங்கதை 1-48)

“சுனையெலாம் நீலம் மலர (பரிபாடல், 15) ‘அணிதிகழ் நீலத் தாய் மலர் (மணிமேகலை, 3) ‘நீலம் உற்பலம் நீலோற் பலமுமாம் : (பிங்கலங்கை)

இவற்றால் நீல மலரின் கிலைமையும் சீர்மையும் அறியலாகும்.

இத்தகைய மெல்லிய நீலமலர் செவ்விய சீதிைக்கு உவமை யாய் வந்தது. பசிய கோலக் திருமேனியணுகிய இராமனது உருவ ஒளி படிக்க பொழுது சீதை மருவி மிளிரும் காட்சி கருதி யுனா நேர்த்தது. அரிய எழில் கரிய நிலையது.

டதன்னை மீன் என்றான் , அண்ணியை மலர் என்ன்ை; அண்ணனை நீர் என நினைவுறுத்தினன்.

கண்ணியை விட்டுப் பிரிக்கால் மீன் யாதொரு செயலுமின்றி உடனே இறத்து படும். நானும் உன்னே விட்டு நீங்கில்ை அக் கணமே உயிர் அழிந்த படுவேன் என்பதாம்.

கன் லுள் வாழும் மீனே என்ன நிலையிலும் யாண்டும் கண்ணிர்

வெளியே கள்ளாது; என்றும் இனிய நீர்மையே புரிந்து நன்று பாதுகாத்து வரும். ஒாறிவும் இல்லாக அங்கீரின் நீர்மையைக் கூடப் பேரறிவுடைய நீ பேணுது கின்றது எனது ஊழ்வினையே யாம் என்று உள்ளம் உருகினன்.

கண்ணிளினும் எவ்வளவோ கண்ணளியுடைய புண்ணிய சேனை உனக்கு என்னுடைய கிலேமையை மேலும் எடுத்துச் சொல்லுதல் மிகையாம். உய்தி புரிந்து உரிமை செய் காள்க.