பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1449

தம்பியை நோக்கி ஒன்றும் பேசாமல் கண்ணிர் மாலையாய் ஒட மெளனமாய் கிற்கும் இப்பரிபவ கிலையில் அரிய சிந்தனைகள் பல அடங்கியுள்ளன.

நான் முடி இழந்ததோடு அமையாமல் அாசர் குடியில் பிறந்த எனது அருமைத் துனேவனும் அடவியில் அலைய நேர்க் ததே! தாயும் தங்தையும் நொந்து தவிக்க என்குடி யாதொரு பாது காவலும் இன்றி நாதி யற்றுள்ளதே ! சிறந்த கிலையில் உயர்ந்து விளங்கிய அரச குடும்பம் என்னுல் குலைந்துபட வந்ததே செல் லத் தம்பியும் என்னுடன் அல்லல் அடையத் தொடர்கின்றானே! யாதும் சொல்ல முடியவில்லையே என இன்னவாறு இன்னலுழந்து கண்ணிர் சொரிந்து அண்ணல் காைத்துகின்றன்.

வசிட்டர் வந்தது.

அன்பு நலம் கனித்து, சகோதா வாஞ்சை கதம்பிப் பரி வுரையாடிப் பிரிவரு கிலையில் தம்பியும் தமையனும் இங்ானம் மறுகி மயங்கி உருகி கிற்குங்கால் வசிட்டர் அங்கு வந்தார்.

அம் மாதவரைக் கண்டதும் இம் மானவீரர் வணங்கினர். மா வுரிதரித்துத் துறவுக்கோலம் பூண்டு கிற்கும் இராமனது கிலை மையை நோக்கி முனிவர் நெஞ்சம் கலங்கினர். மதி கலமுடைய அவர் விதிவலியை நினைந்து வெதும்பி நொந்தார். ஞான சீலரா யிருந்தும் இக் குலமக்களின் குலைவுக்கு இாங்கிக் குலை கடுங்கி நெடிது நோம் நிலைமறந்து கின்றார்,

அன்னவர் முகத்திைேடு அகத்தை நோக்கின்ை பொன்னரைச் சிரையின் பொலிவு நோக்கின்ை என்னினி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான். (1) வாழ்வினே துதலிய மங்கலத்து நாள் தாழ்வினை யதுவரச் சீரை சாத்தின்ை ; சூழ்வினை நான்முகத்து ஒருவற் குழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ ? (2) வெவ் வினே அவள் தர விளைந்த தேயுமன்று : இவ்வினை இவன்வயின் எய்தற் பாற்றுமன்று : எவ்வினை நிகழ்ந்ததோ ? ஏவர் எண்ணமோ ? செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான். (3)

i