பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 1453

சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்

சிலம் தாங்கித் தானம் தலே நின்று

மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்

25 தேவரும் மக்களும் பிரமரும் ஆகி

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்.

(மணிமேகலை. 24) மூன்று காணங்களிலிருந்து கருமங்கள் விளைகின்றன. அவை

இருவினைகள் ஆகின்றன ; அவற்றின் பயன்களை உயிரினங்கள் நுகர்கின்றன என உணர்த்தியிருக்கும் இதனை ஊன்றிப்பார்க்க. பொருள் நிலைகளே ஆழ்க் து ஒர்ந்து கொள்ளுக.

கரும பலன் அனுபவித்தே தீரும். மனிதனது செயலி விருந்து விளைந்தமையால் இது வினை என வந்தது. வினே முதிர்ந்து பலனே ஊட்டுங்கால் அது விதி என கின்றது.

ஊழ், பால், முறை, தெய்வம், உண்மை, கியதி, வினை, விதி, கருமம் எனப் பல பெயர்களால் இது வழங்கப்படுகிறது. யாவும் காாணப் பெயர்கள். பெயரின் குறிப்பால் அதன் இய்ல்பும் நிலையும் தெளிவாம். H

வினை விளைவு முதிர்த்து பழமையா யுள்ளது ஊழ் என வக்கது. ஊழ்=பழமை. இது பழவினை எனவும் வழங்கப்படும்.

பால் = பகுதியாய் வகுக்கப்பட்டது. இன்ன உயிர் இன்ன

பலனை இன்னபடி அனுபவிக்கும் என முன்னம் முடிந்தது என்க. யாண்டும் எவ்வழியும் முறை கவருமல் நியமமாய் வருதலால் கியதி முறை முதலிய பல பெயர்களைப்பெற்று இது நிலவியுள்ளது.

வினேயின் அளவே யன்றி அதற்கு மாருகக் கடவுளும் யாதும் செய்யாது. தனித் தலைமையில் கின்று உயிர்களை இயக்கி வருதலால் விகியே தெய்வம் என கின்றது, கருமத்தைத் தவிா வேறு கடவுள் இல்லை என்பாரும் உளர். அவ்வாறு கூறுகின்ற அவர்க்குக் கருமப் பிரமவாதிகள் என்று பெயர்.

இந்தக் கருமத்தின் வசமாய் யாவும் இயங்கி வருகின்றன.

‘ ர்ேவழிப் படு உம் புணேபோல் ஆருயிர்

முறைவழிப் படு உம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம். : (புறம், 192)