பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1465

‘ இயங்கு பல் உயிர்க்கு ஒர் உயிர் என நின்ற இராமன்’ ஆக லால் ஆருயிர்கள் இவ்வாறு அலமதேர்ந்தன. கம் காவியநாயகனை ஒவிய உருவன விளக்கி ஆவியின் ஆவியாகக் கவி உணர்த்தி வரு கிறார் ஈண்டு உாைத்தகை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இடங்கள்தோறும் நளினமாக கிலைநாட்டிவந்தவர் முடிவில் அவன் மீண்டு வருங்கால் இதனை மங்களமாக்கி மாண்புறுத்தி யிருக்கி ருசி. அம் மாட்சி மகி நலம் கனிந்த அதிசய நிலையது. ஆண்டுக்

காண்போம்.

ஊரும் காடும் அயலே இங்ானம் பரிதபித்து கிற்கத் தனது இனிய மாளிகை யுள்ளே இப் புனிதன் புகுந்தான்.

சீதை கண்டது.

தன் நாயகன் வருகின்ற கோலத்தைக் கண்டதும் சி தை உள்ளம் துடித்து உயிர் பதைத்து விாைந்து எழுந்து நடுங்கி கின் ருள். அண்ணல் அருகு நெருங்கினன். நாதா ! என்ன நிகழ்ந் கது ’’ என்று அப் பெண்ணாசி வெருவி வினவினுள். பTது பதில் சொல்வது ? என முதலில் வள்ளல் மறுகினன். பின்பு தேறி மெள்ள உரை செய்தான்.

பொருவில் எம்பி புவி புரப்பான், புகல் இருவர் ஆணையும் ஏந்தினென் இன்றுபோய்க் கருவி மாமழைக் கல்தடம் கண்டு நான் வருவன் ஈண்டு வருந்தலே நீ என்றான். (நகர், 221)

தனது மனேவியிடம் இக்கோமகன் இங்வனம் விநயமாகக் கூறினன். இருவர் என்றது கைகேசியையும் கசா கனேயும் குறித்து கின்றது. கான் போக நேர்ந்ததின் யோகம் காண வந்தது.

எனது அருமைக் கம்பி பாகன் உலகைப் பாதுகாப்பான்; தாயும் கங்கையும் எனக்கு ஒர் இனிய பணியைத் தந்துள்ளனர்; அது வனத்தில் செய்ய உரியது; அதனைப் போய் வி ை ந் து செய்து முடித்து உடனே நான் வந்து விடுவேன்; நீ யாதும் வருங் காமல் அதுவாையும் இங்கு அமர்ந்திருஎன நயந்து மொழிந்தான்.

மனைவி மனதை இனிது தேற்றி இக்கோமகன் தனியே பிரிய உறுதி செய்துள்ளமை உரையில் மிளிர்கின்றது.

184