பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1487

2. அறம் இம்மையில் புகழையும், மறுமையில் பேரின் பத் தையும் கரும். ஆருயிர்க்கு இனிய அங்க அரிய அமிர்கத்தை யாண்டும் எவ்வகையினும் உரிமையுடன் பேணிவாவேண்டும்.

முன்பு நின்று இசைகிறீஇ முடிவு முற்றிய பின்பு கின்று உறுதியைப் பயக்கும் பேரறம். இருமையும் கருமம் இன்பம் அருளும் அருமையை இவ் வாறு அறிவுறுக்கி அதனைப் பரிபாலித்து வரும் பான்மையை உணர்த்தினன். -- செல்வம் முதலிய நல்ல நிலைமைகள் அமைந்தபொழுது கருமம் கழுவி ஒழுகுதலும், அல்லல் நேர்ந்த காலத்தில் அதனைக் கைநழுவ விடுதலும் அறிவுடைமை ஆகுமா ? நீதி நெறியில் என் மறும் நிலையாய் நிற்றலே சிறந்த மனிதக் கன்மையாம். நெறி முறையில் நிலைத்து கிற்கும் மனிதனே உலகிற்கு இனியணுய்த் கனி மகிமையான தலைமையில் கழைத்து வருகின்றான்.

நாம் செய்துள்ள கல்வினையால் இன்பம் வருகின்றது; தீவினை யால் துன்பம் உறுகின்றது. இன்பம் எய்தியபோது விழைந்து மகிழ்கின்ற நாம் துன்பம் வந்த இடத்தும் அவ்வாறே உவத்து அனுபவிக்கவேண்டும் அதுவே நேர்மையாம். விளைத்த வினைப் பயன்கள் எவ்வழியும் அனுபவியாமல் ாே ; கல்லகில் உவந்து, அல்லதில் வருக்கல் அறிவின்மையேயாம் என உறுதி கலங்களை வலியுறுத்தின்ை --

  • கன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவது எவன். ‘ (குறள் 379) என்னும் பொய்யாமொழியை இது அடி ஒற்றி வந்துள்ளது. வனம் போகாமல் ஊருக்கு மீண்டு வரும்படி மந்திரி மறுகிவேண் டினமையால் இந்த ஆண்டகை இங்கனம் அறிவு கலம் கூறினன். பிதுர்வாக்கிய பரிபாலனம் ஆகிய தனது அருமைத் தரு மத்தைத் தடைப்படுக்க நேர்ந்தமையால், அறக்கின் பெருமை யைச் சிறப்பாக எடுத்துக்காட்டி அதனேக் துறக்கலும் மறத்த லும் பெருங்கேடாம் என உள்ளம்கொள்ள உறுத்தி உாைக்தான்.

  • இன்பம் எதிர்ந்தபொழுது உள்ளம் களிப்பவர் துன்பம் நேர்ந்த இடத்து அல்லல் உறுவது புல்லிது என்பதாம். செய்த வினைப் LL ! அனுபவித்தற்கு உனக்கு என்ன கொள்ளே! என அடிகள் இடித் துக் கூறியிருக்கும் அழகை இதில் துணித்து நோக்குக.