பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1290. கம்பன் கலை நிலை

காது. கலைகலங்களைக் கருதியுணர்ந்து முன்னேர் மொழிகளைப் பொன்னே போல் போற்றி உண்மைப் பொருள் கண்டு உயர்ந்த அருள் காணவேண்டும்.

இங்கே அந்தணர் என்ற து அரிய கவமுடைய முனிவர்களை, ஆதியில் இது சாதிப்பெயராய் வழங்கப்படவில்லை. தன்மைப் பெயராய் விளங்கிகின்றது. |

“அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.’ (குறள், 30)

என்னும் கேவர் வாக்கால் அவர்தம் நீர்மையும் கிலைமையும் தெரிய லாகும். எல்லார்க்கும் என்னுமல் எவ்வுயிர்க்கும் என்றமையால் யாதொரு பிராணிகளுக்கும், ஒசறிவுடைய கொடி செடிகளுக்கும் கூட ஊ அறு பு ரி யா து அவர் உரிமைபுரிந்து ஒழுகுவர் என் பது வெளியாயது. (இங்கனம் கண்ணளியும் கயையும் உடைய புண்ணிய சீலர்களையே இங்கே நம் கவி போற்றியிருக்கிரு.ர். சர்வ சீவ தயாபரன் என்பது கடவுளுக்கு ஒரு ப்ெயர். அத்தகைய சிவகருணை யுடைய மாதவர்கள் கேவரினும் சிறந்தவராயினர்.

உருவில் மனிதாாயினும் உணர்வில் பாமகிலையில் ஒளி செய்

துள்ளமையால் முனிவர்கணங்களாய் இவர் கனி எண்ணகின்றனர்.

முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் படிவர் உறுவர் பண்ணவர் ஐயர்

அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர் துறவேர்ர் கடிங்தோர் மோனியர் யோகியர் கோபம் காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் தாபதர் இருடிகள் தம்பெய ராகும். ‘ (பிங்கலங்தை)

காணப் பெயர்களாய்க் கனிந்து வந்துள்ள இவற்றால் இருடி

களுடைய இயல்பும் செயலும் பூரணமாக உணர்ந்துகொள்ளலாம்.

திரிமூர்த்திகளினும் இவரைப் பெரியர் என்றது. இவருடைய அருமை பெருமைகளை உணர்ந்து உரிமையோடு உவந்துகொள்ள, இயல்பாகவே தேவதேவராய் அவர் உயர்ந்துள்ளனர்; என்றும் பெரியாக எல்லாாலும் புகழ்ந்து போம்மப் பெற்று உலகப் பிரசித்தாய் ஒளி மிகுந்துள்ள அவாை வரிசையாய்எதிர்கிறுத்தி இந்த அருந்தவர் மகிமையை இங்கனம் விளக்கியருளிர்ை.