பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1516 கம்பன் கலை நிலை

நோக்கி உடனே தனது மனைவியின் அழகிய விழிகளை விழைந்து பார்த்து இளநகை புரிந்து உளமிக உவந்து வியந்து போனன்.

செவ்விய தாமரை மலர்களைப் பார்த்துத் தன் கணவனுடைய கால் அழகுக்கு ஒவ்வாது என அவள் களிக்கிருக்கிருள் கரிய குவளைப் பூக்களை நோக்கித் கன் மனைவியின் கண் அழகிற்கு இணையாகாது என இவன் மகிழ்ந்திருக்கின்றான்.

வழியில் எதிர்க்க காட்சிகளைக் கண்டு காதலர் உவந்திருத்தல் ஆ.காம் கனின் த மாதுரியம் சாந்திருக்கின்றது. காதலின் சுவை

கள் ஒதுங்தோறும் இனியனவாய் உவகை புரிந்து வருகின்றன.

‘ கொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச்சுவை அமுது ” என்றது வேனுகான க்கை. கிளை=மூங்கில் முங்கில் கழியால் செய்யப்பட்ட சிறிய புல்லாங்குழல் இசையையும், யாழின் இனி மையையும், செங்கேனையும், தீம் பாகையும் சுவையில் வென்ற அதிமதுரமான இனிய மொழிகளை யுடையாள் எனச் சீதையை இங்கே எழுகிக் காட்டி யிருக்கிரு.ர். கிளவி=சொல். அதனை யுடையவளைச் சுட்டி கின்றது. சொல்லினிமையை விளக்கி வந்தி ருக்கும் விசேடணங்கள் பல முறையும் படித்துச் சுவைத்து மகி ழும்படி சுவை சுரக் கிருக்கின்றன.

இவ்வாறு பலவகைக் காட்சிகளையும் பார்த்து வழி வருக்கம் தெரியாமல் கழி மகிழ்வுடன் கடந்து போயினுள்.

நீர்வளம் முதலிய பல செழுமைகள் கிறைந்துள்ள மருக கிலத்திடையே சென்றுள்ளமையால் குளுமையான இனிய காட் சிகள் காண நேர்ந்தன. எங்கும் வெளியே போகாமல் என்றும் அந்தப் புரத்திலேயே இருக்கவள் ஆதலால் இங்க காட்டுப் புறக் காட்சிகள் சீதைக்குப் போதிசயங்களாய்ப் பெருகி கின்றன.

கருப்பேந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணுள்

பொருப்பேந்திய தோளானெடு விளையாடினள் போனுள்.

தன் காதலனேடு களித்து விளையாடிச் சீதை உல்லாசமாய் வழி நடந்து போயிருக்கும் ஒயிலினை இதில் நாம் காண்கின்றாேம். கருப்பு எந்திரம் என்றது கரும்புகளிலிருந்து சாறு எடுக்கும் கருவியை. பலவகையான யந்திர சாதனங்கள் அந்தக் காலத்தில்