பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1520 கம்பன் கலை நிலை

என்றமையால் வேதம் முகவிய எவற்றினும் ஆகிமூல்ப் பொருளைத் திருவாய் மொழியால் எளிது நோக்கி இனிது மகிழ. லாம் என்பது தெளிவாம்.

“எப்பொருளும் தானுய் மரகதக்குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுது நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே. ‘

(திருவாய்மொழி 2-5) இங்கனம் பண்ணின் நோக்கும் பராவமுதம் ஆன இப்பெருமானே முனிவர்கள் கண்ணின் நோக்கிக் களித்தனர். பா = மேலான. பா அமுதம் பாாவமுதம் என வந்தது.

பசும் கண் என்றது கண்ணளி நிறைந்த புண்ணியமுடைமை கருதி.உயிர்களுக்கு இாங்கியருளும் கண்னேட்டமே.கண்ணுக்குப் பசுமையாம். அந்த இாக்கம் இல்லையேல் பசையற்ற வன்கண் னய்ப் பழிக்கப் படும். அருள்கலங் கனிந்த பசுங்கண்கள் பசிய கோலத் திருமேனியைப் பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றன. கருனேக் கண்ணுளருக்கே கருணைக் கடலான பாமன் காட்சி புரிந்தருள் கின்றான்.

ஞானக்கண்ணுலும் காணமுடியாக அரிய பொருளைத் தம் புண்ணியப் பேற்றால் நேரே ஊனக் கண்ணுல் கண்டு முனிவர்கள்

உவகை பூக்கனர்.

பெண்ணின் கோக்கும் சுவை, எண்ணி நோக்கி இயம் பரும் இன்பம், பண்ணின் நோக்கும் பா அமுது ‘ எனக் கண் னின் நோக்கிய புண்ணியர்கள் கருதி உருகியிருக்கும் கணிவையும் அழகையும் நுணுகி நோக்கி இங்கே கண்ணியுள்ள மூர்த்தியின் மகிமையையும், கிலைமையையும் ஒர்ந்து உணர்ந்து கொள்க. so

3. உவகை மீதுார்ந்து விாைந்து வந்தவர் அருகு நெருங்கி ஆவலுடன் பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.

கதிர்கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினல் மதுரவாரி அமுதுஎன மாங்துவார்.

தபோதனர்கள் இராமனைக் கண்டு களித்திருக்கும் கிலை மையை இதில் கருதி மகிழ்கின்றாேம். மாத்துதல் = அள்ளிக்