பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1524 கம்பன் கலை நிலை

அவன சடை கங்கையைப் புடை ஊற்றுதல் போல் இவன் சடையிலிருந்தும் இதுபொழுது கங்கை நீர் வடிகின்ற காட்சியை இங்கனம் காட்டி யருளினர். சிவகாமி கண்டு மகிழ அவன் கனக சபையில் கின்று ஆடுகின்றான்; சீதை கண்டு களிக்க இவன் கங்கையில் நீர் ஆடுகின்றன்.

திங்கள் சூடிய செல்வனில் தோன்றின்ை.

சிவபிரானேடு இராமபிரான இங்கே வருணித்துக் காட்டி யிருக்கும் காட்சியைக் கண்ணுான்றி நோக்குக.

நாகம்=யானே, பாம்பு. மதயானையின் துதிக்கை போல் திாண்டு உருண்டு நீண்ட கையினன் என இராமனையும், பாம்பைக் கங்கனமாகக் கொண்டவன் எனச் சிவனையும் கண்டு கொள்க. சிலேடை என்னும் அணி அமைந்து இப்பாட்டு வந்துள்ளது.

துாய வெள்ளை நிறத்துடன் வெள்ளமாய்ப் பெருகி யுள்ள கங்கை நீரில் இராமன் சீதையோடு முழுகி எழுந்த காட்சி கிரு மால் இலக்குமியோடு பாற்கடலில் பள்ளிகின்று எழுந்ததுபோல்

விளங்கி கின்றது.

வெள்ளி வெண்ணிறப் பாற்கடல் மேலே நாள்

பள்ளி நீங்கிய பான்மையில் தோன்றினன்.

கவி உள்ளி உணர்த்தும் பொருள் நயங்கள் உள்ளுங்கோறும் உவகையை விளைத்துக் கெள்ளமுதாய்த் தி க்தித்து வருகின்றன.

மேலை நாள் என்றது இங்கே இன்ன வண்ணம் மானுடய்ை இவன் அவதரிக்கற்கு முன்னம் என்றவாறு. பண்டு பாற்கடற் சேக்கையில் பள்ளி கொண்டிருந்த அப் பெருமாளே இன்று இவ் வுருவாய்த் துள்ளி வந்துள்ளது என்பதாம்.

ஆகியில் கிருமாலின் பாகத்தைத் தீண்டியதால் கங்கைக்கு இவ்வளவு பெருமை வந்தது; அப் பெருமானின் கிருமேனி முழு வதும் இன்று முழுகுவதால் ஒருங்கே கழுவப் பெற்றமையால் இனி இங்கதியின் மகிமையை எவர் அளவிட வல்லார் ? கன்னில் கோய்ந்த உயிரினங்கள் யாவும் உயர் கதியில் உய்யுமாறு இங்க

மெய்யல்ை அருள் மிகப் பெற்றக் கங்கை கொள் மிகக் க.க.