பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1531

நிTஒT இறைவனுக்குக் கண்ணப்பர் உணவு கந்ததும் ஈண்டு எண்ணத்தக்கது. அந்தப் போன்பர் போலவே இந்த கோன் பன் ஆர்வ மீதுார்ந்து அதிசயநிலையில் வந்துள்ளான்.

உலகம் ஒன்றும் கெனியாமல் இங்கனம் பக்திப் பாவசய்ை கின்று குகன் கூறிய விருந்து மொழியை கினேந்து அவனுடைய நேர்மையான நெஞ்சின் கிலைமையைக் கூர்மையாக உணர்ந்து நீர்

மைகள்ை வியந்து இராமன் பேருவகையடைந்து ஆர்வமீதார் க்தான்.

  • அன்பினுல் கொணர்ந்தது அமிர்தினும் சீர்த்தது’ என அதனைப் புகழ்ந்து பாராட்டின்ை. ‘ அரிய காதலனை உன் கையால் கொண்டுவந்தது எதுவாயினும் அது பரம புனிதமானது. அமுதினும் இனியது; அதிமதுரமான அவ்வுணவை நான் உவந்து உண்டதாகவே நீ கினைந்துகொள்ள வேண்டும். இம் முனிவர்கள் உதவிய கனிகளை இப்பொழுதுதான் அருத்தினேன்; பரிசுக்த னை உனது இனிய விருந்து கினைதொ.ாம் எனக்கு இன்பம் தருகின்றது ‘ என அன்புரையாடி நளினமாக இராமன் இங்கே அளவளாவி யுள்ளான்.

குகன் இனியது என்று விழைந்துகொண்டுவந்த மீன் உணவை யாதும் இகழ்ந்து குறியாமல் புகழ்ந்து போற்றி அவனது உள் ளக்கைத் தேற்றியிருக்கும் அமைதியும் நாகரீகமும் தயங்து G திக்கத் தக்கன. எவர் மனமும் புண் படாதபடி கண்பாற்றியரு ளும் இராமனது பண்பாடு யாண்டும் இனிமை சுரந்து உரிமை நிறைந்து, உணர்வு கனிந்து மிளிர்கின்றது.

புலால் உண்டல் இழிந்தது; அவம் மிக உடையது; கவ நிலைக்கு ஆகாதது; உயர்ந்தோரால் அருவருத்து ஒதுக்கப்பட்டது என்னும் குறிப்புகள் இங்கே கொனித்திருக்கின்றன. தொனிகள் எங்கும் துணித்து உனா வுரியன. தனித்த உண்மைகள் இனித்த கிலையில் இதமாய் யாண்டும் சனித்து வருகின்றன. சுத்த சைவ மான தாய உணவு வாழ்க்கையைக் கைக்கொண்டு நம் கவி வாழ் ந்து வந்துள்ளமை ஈண்டு ஆழ்ந்து தெளியகின்றது.

கொலையால் வருவது ஆகலால் ஊனுணவு புலையாய் இழிக்கப் பட்டது. அருள் கலம் கனிக்க கரும வாழ்வை மனிதர் குழாம் மருவி ஒழுகவேண்டும் என்னும் அறிவு கலங்கள் காவியத்தில் பெருகியிருக்கின்றன. கவியின் இதயம் கருணை ஒளி வீசுகின்றது.