பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1539

பொழுது அடைவதையும் உதயம் ஆவதையும் குறித்து, வரும் கவிகளில் அரிய கருத்துக்கள் பல மருவி வருகின்றன. தலைமையான புலமையிலிருந்து விளைந்து வருதலால் உயர்ந்த கலா வினேகங்களும் உறுதி நலங்களும் சுவை சாந்து உவகை கிலை யங்களாய் ஒங்கி நிற்கின்றன. கதைத் தொடர்பில் இடை யிடையே உயிரினங்களுக்கு உயர் ோசனைகள் இனிமையாகவும். எளிமையாகவும் பெரிதும் நளினமாக ஒளி செய்தருள்கின்றன.

அன்று உதித்த கதிரவன் உலக மக்களுக்கு ஒர் உறுதி உண்மையைத் தெளிவுறுத்தின்ை : அறிவுடையமானுடங்காள்! நீங்கள் அரிய பிறவியைப் பெற்றிருக்கிறீர்கள் ; இந்தப் பிறவிக் குரிய பெரிய பயன் இனிமேல் வேறு ஒரு பிறவியை அடையா கிருத்தலேயாம், பிறக்தன யாவும் இறந்துபோம்; சுவர்க்க முதலிய சிறந்த தெய்வ பதவிகளும் அழிந்துபடும் ; ஆதலால் என்றும் அழியாத பேரின்ப வீட்டையே பெற முயலுங்கள் ; தேவர் களுள் ஒருவனை நானும்கூட நேற்று மாலையில் இறந்தேன் ; இன்று காலையில் பிறந்தேன் : இன்னும் கொஞ்ச நோக்கில் மீள வும் இறக்துபடுவேன் ; என்னுடைய நிலைமையைக் கண்டாவது கிலையாமையை நீங்கள் தெளிந்து கொள்ளவேண்டும் ; அழியும் பதவிகளை யாண்டும் விரும்பாதீர்கள் ; பிறவியை ஒழியுங்கள், என்று சீரிய ஒரு கத்துவ உப தேசம் செய்வதுபோல் சூரியன் தோன்றினன்.


பிறவா இன்பம் பெறுங்கள்

பிறவா வெய்யோன் பிறந்தனன் என்றது அவனது உண்மை கிலையை ஊன்றி உணர்ந்து கொள்ள. என்றும் ஒருபடியாய் அவன் கின்ற கிலையிலேயே கிற்கின்றான். கில மண்டலத்தின் சுழற்சி யால் அக் கதிர் மண்டலம் காந்தும் திறந்தும் காணப்படுகின்றது. அந்த மாயக்காட்சி மாயப்பிறப்பிற்கு உவமையாய் வந்து என் அம் மாயாத தாய உறுதிப்பேற்றை உணர்த்தி கின்றது.

உதய காலத்துச் சூரியனைக் கண்டு காமயை கள் மலர்க்கன; இராமனைப் பார்த்துச் சீதை முகம் மலர்ந்தது. அவளது உள்ள க் தாமரையும் வகளும்புயமும் யாண்டும் மகிழ்ந்து அலர்ந்திருக் தங்கு உரிய அழகிய இனிய பொருள் உலகம் அறிய வந்தது.

செஞ்ஞாயிறு எழுமுன் கருஞாயிறு எழுத்தது ; அக்க எழுச்சியில் மகிழ்ச்சி கலங்கள் விளைந்தன.