பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1558 கம்பன் கலை நிலை

அறிவு நோக்கு இன்றேல் பருவகாலங்களில் உரிய கருமங் களைப் புரிய இயலாது ஆதலால் அங்கி நோக்கிற்கு அறிவுநோக்கு ஏதுவாயது. கால கியமங்கள் கதி நலம் புரிகின்றன.

காலம் அறிந்து இடம் தெரிந்து கடமைகளை வழுவாது செய்யும் அறிவுடைமை இயலுடைமையாய் இவனிடம் புக

லடைந்துள்ளது.

இன்று இங்கு அறிவை நோக்கி கிற்பவன் என்றும் எங்கும் மெய் யறிவாலேயே நோக்க உள்ளவன் என்பதையும் நோக்கிக் கொள்க. கதாநாயகனது அங்கி நோக்கில் கவி நமக்குப் பல சிக் தனைகளை உங்கி கோக்க உரிமை கூர்ந்து கந்திருக் கின்றார்,

தம்பி சாலை சமைத்தது.

மாலை கியமம் செய்ய இராமன் நதிக்குப் போகவே இலக்குவன் குளிர்ந்த சோலை சூழ்ந்த இனிய இடத்தில் அழகிய ஒரு குடிசை அமைத் தான். அக் குடில் கிலையை அடியில் காண்க.

நெடுங்கழைக் குறுந்துணி நிறுவி மேனிரைத்து ஒடுங்கலில் நெடுமுகடு ஒழுக்கி ஊழு,ற இடுங்கலில் கைவிசித் தேற்றி எங்கனும் முடங்கலில் வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே, (1)

தேக்கடைப் படலையில் கூரை செய்து பின் பூக்கிளர் காணலில் புல்லு வேய்ந்து கீழ்த் து.ாக்கிய வேய்களில் சுவரும் சுற்றுறப் போக்கிமண் எறிந்தவை புனலில் தீற்றியே. (2)

வேறிடம் வீரற்கும் மிதிலே நாடிக்கும் கூறின நெறிமுறை குயிற்றிக் குங்குமச் சேறுகொண்டு அழகுறத் திருத்தித் திண் சுவர் ஆறிடு மணியொடும் தரளம் அப்பியே. (3 2

மயிலுடைப் பீலியின் விதானம் மேல்வகுத்து அயிலுடைச் சுரிகையால் அருகு தாக்கறுத்து எயிலிளங் கழைகளால் இயற்றி யாறிடு செயலுடைப் புதுமலர் பொற்பச் சிங் தியே. (4 .

கம்பியின் அற்புதக் கைத்தொழில் இப்படி அமைந்திருக்கிறது.