பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1587

கொண்டு மறைமுடிவுகளை முறையாகக் கவி வெளிப்படுத்தி வரு வது விநயம் மிக வுைடையது. உரைகளில் அவருடைய உள்ளக் கிடக்கைகள் ஒளிவிட்டு கிலவுகின்றன.

கிலையில்லாத உலக வாழ்க்கைகளை நிலையாக எண்ணுதல் புலையாம் என்பதைக் கலை கலங் கனியப் பல இடங்களிலும் இக மாகக் காட்டி வருகின்றார். உண்மை புணர்ச்சிகள் ஒளிமிகுந்து சுவை சாந்து உவகை புரிந்து மிளிர்கின்றன. சரித கிகழ்ச்சி

_

யில் கத்துவ நிலைகள் உய்த்துணர்வுடன் தழைத்து வருகின்றன.

1. உயிர்க்கு உறுதித்துணே துறவும் அறமுமே என்றது . இல்லறம் துறவறம் என்னும் இருவகை கிலைகளையும் கருதி. மனே வாழ்க்கையில் கருமநெறி கழுவி வாழ் பக்குவமும் பருவ மும் வந்தால் அதனைத் துறந்து துறவியாய் கின்று அரிய கவ வாழ்வில் அமர் என்பதாம். அறமும் துறவும் ஆருயிர்க்குப் பேருரி மைத் துணைகள் என்பதை ஒர்மையாக உணர்க்கி யிருக்கிறார்,

துறவை முதலில் குறித்தது உயிர்க்கு உறுதியான அதன் தலைமையும் நிலைமையும் தெரிய. பாச பக்கங்களால் பிறவிக்! துயரங்கள் பெருகி வருகின்றன. ஆதலால் அவற்றை அறவே துறந்தபோது தான் உயிர் அல்லல் நீங்கி ஆனந்தம் அடைகின் றது. ஆகவே துறவு பிறவி நீக்கத்திற்கு உறங்ாய் அமைந்தது.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினேப்

பற்றி விடாஅ தவர்க்கு. (குறள், 347)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர். (குறள் 348)

இந்த அருமைத் திருவாக்குகள் ஈண்டு உரிமையாய் ஒர்க் து சிந்திக்கத்தக்கன.

தீர்த்துறத்தலாவது உலக பாசங்களை அடியோடு ஒழித்துப் போதல். அங்ானம் ஒழித்தவரே முற்றத்துறந்த முனிவாாாய் முத்தியில் முதன்மை இன்பம் எய்துகின்றனர்.

-- விட்டவர் பேரின்ப விட்டை அடைந்து மகிழ்கின்றனர் ;

விடாதவர் பிறவிக் காட்டில் இழிந்து உழல்கின்றனர்.

துறவா வழியும் அறநெறியில் ஒழுகின் அவர் புண்ணிய சிலாாய் உயர்ந்து எண்ணிய இன்பப்பேற்றை எய்தி.மகிழ்கின்றார்,