பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1588 கம்பன் கலைநிலை

இங்கனம் துறத்திலும் அறத்துறையும் உயிர்க்கு இதத்தைச் செய்து வருதலால் அவை அதற்குத் துனே என வந்தன.

கங்தை காய் மனைவி மக்கள் ஒக்கல் முதலிய பக்கச் சூழல் களைத் துணை என நம்பி மயங்காதே அறமே உனக்கு இனிய உறுதித் துணையாம் ; அதனையே உரிமையோடு பேணிக்கொள்க என உணர்த்திய படியிது.

ஈட்டிய ஒண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார். காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்-மூட்டும் எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற காட் தெரியின் அறமே துணை. (அறநெறிச்சாரம்)

தருமமே இணேயில்பொருள் தரையிடைத் தகைசால் ஒருமை இன்பினே உதவி விண்ணுலகினும் உடன்போய் அருமை இன்பம் உய்த்து அந்தகற் செறும் எனில் அறமே இருமையும் துனே ஆகுவ தன் றி மற்றில்லே.

(திருக்கடவப்புராணம்)

எளிதென இகழாது அரிதென உரையாது துமக்குர்ே நல்குதிர் ஆயின் மனத்திடை கினேப்பினும் பிறக்கும் மொழியினும் வளரும் தொழிற்படின் சினேவிடுஉப் பயக்கும் உணர்த்தின் இவனும் உம்பரும் துணையே அதல்ை, துறைதொறும் துறைதொறும் நோக்கி அறமே கிறுத்துமின் அறிந்திசி ைேரே. (ஆசிரியமாலை)

மன்னுயிர்க்கு மன்னிய துணை அறமே; அதனை எவ்வழியும் ஈட்டுக என இன்னவாறு நூல்கள் பல கூறியுள்ளன.

இந்த அகத்துணையே அன்றி உயிர்க்கு வேறு புறத்துணை நோேயாரும் இலர் என்பார் புறத்து ஒரு துனே இலை ‘ என் ருர். தேக பத்துக்களைத் துணைகள் என நம்பி மோகம் அடை யாதே என்பதாம்.

o “ தங்தைதாய் தமர் தாரம் மகவென்னும் இவைஎ லாம்

சங்தையில் கூட்டம் , இதில் ஒர் சங்தேகம் இல்லை : மணி மாடமாளிகை மேடை

சதுரங்க சேனே யுடனே வந்ததோர் வாழ்வும் ஒர் இந்திர சாலக்கோலம் ;

வஞ்சனே பொருமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மலபாண்டமோ

வான்சனே இலாக கனவே. H. F. (தாயுமானவர்)