பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1592 கம்பன் கலை நிலை

இந்த விளக்கு உவமையைப் பண்டை நூலாசிரியரும் எடுத் துக்காட்டி கிலேயாமையை அறிவுறுக்கியிருக்கிரு.ர். புரிமுத்த மாலைப் பொற்கோல் விளக்கினுள் பெய்த நெய்யும் திரியும் சென்று அற்றபோழ்தே திருச்சுடர் தேம்பின் அல்லால் எரிமொய்த்துப் பெருகல் உண்டோ ? இருவினே சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமல் செல்வம் பற்றி யார் அதனே வைப்பார் :

(சீவக சிந்தாமணி, 2316)

நெய்யும் கிரியும் அற்ற பொழுது அழகிய விளக்கு அவிகல் போல் பெரிய கல்வினை தீர்ந்தபோது அரிய செல்வம் அறவே

மாய்ந்துபோம் என இஃது உணர்த்தியுள்ளது.

இங்கே செல்வ கிலேயாமைக்கு வந்த உவமை தம் கவியுள் உருவகமாகி யாக்கை கிலையாமையை உணர்த்தியிருக்கின்றது.

புண்ணிய நறுநெய் என்று தொடங்கியிருக்கும் கண்ணியத் தையும் கம்பீரத்தையும் கருத்து அமைதியையும் தனித்துனரின் இனித்த உண்மைகள் பல சனித்து வருதலை அறியலாகும்.

விளக்கொளியும் வேசையர் கட்பும் இரண்டும் துளக்கற நாடின் வேறல்ல-விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே அவரன்பும் கையற்ற கண்ணே அறும். (நாலடி, 371)

விளக்கு இதில் இவ்வாறு விளக்கி இருக்கிறது.

1 திரியும் நெய்யும் ஒருவயிற் செல்லிய

எரிவிளக்கு அற்ற இருள்பரங் தாங்கு (பெருங்கதை,3-1)

“ கடுங்கால் நெடுவெளி இடுஞ் சுடர் என்ன H

ஒருங்குடன் கில்லா உடம்பிடை உயிர்கள் :

(சிலப்பதிகாரம், 10)

கடிய காற்று எதிர் இட்ட விளக்கைப்போல உயிர்கள் உரு வற ஒழிகின்றன என முனிவர் வாக்கா இளங்கோவடிகளும் இங் வனம் வழங்கி யிருக்கிரு.ர்.

உயிர் ஒளிமயமானது ; உடலில் மருவியுள்ள பொழுது

இனிது கிகழ்கின்றது; ஒழியுங்கால் சென்ற இடமும் தெரியா

மல் மறைந்து போகின்றது ; ஆகவே விளக்கு உவமை யாயது.