பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1594. கம்பன் கலை நிலை

சொல்லவும் எண்ணவும் முடியாதபடி எல்லையில்லாத பிறவி களில் படிந்து உயிரினங்கள் அல்லல் உறுகின்றன.

இவ்வாறு துன்பம் அடைந்து துடித்து உழல்கின்ற மன் பதைகளுக்குள் இதுவரையும் யாரும் அடையாத இன்ப நிலையை உன் கங்தை அடைக்கிருக்கிருன்.

உன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்கியத்தால் அப்பெருமான் பெற்றுள்ள பேற்றை வியந்து பிாமாவும் போற்றி கிற்கின்றான்.

‘புண்டரீகத் தனி முதற்கும் போக்கரு விண்டுவின் உலகிடை விளங்கின்ை’

எனத் தந்தை அடைந்திருக்கும் அரிய பதவியைத் தெரியவுணர்த் கின்ை. புண்டரீகம்=தாமரை. தனிமுதல் என்றது பிாமனே.

“b

அங்கே பாம பதவியை அடைந்திருக்கின்ற பிதாவுக்கு இங்கே நீ செய்ய வேண்டிய நீர்க் கடனைச் செய். அழுவதை விடு. முழுவதும் தெரிந்த நீ பிறவிப் பாசத்தால் இங்கனம் பேது.டி கினருய் ! உறுதியுண்மைகளைக் கருதி யுணர்ந்து பொறுதியாயிரு. ர்ேமேல் குமிழி போல் கிலையில்லாத வாழ்க்கை ; அது கிலை குலைந்ததே ‘ என்று கீ குலை குலையலாமா? கலையறிவில் தலை சிறந்து தத்துவ சீலன யுள்ள உனக்கு நான் இத்துணே விரித்துச் சொல்ல வேண்டுமா? எழுந்து போய்த் தந்தைக்கு உரிய அக்கிமக் கருமம் செய் ! என்று பெரியவர் பெரிதும் வேண்டினர்.

‘கண்ணின் ர்ே உகுத்தலில் கண்டதில்லை ; போய்

மண்ணு நீர் உகுத்தி தாமரைக் கையால் ‘ இந்த வாசக ஒசையை எண்ணி நோக்குங்கள். அரிய அரச குமான் அருகே பெரிய தவசி உரிமையுடன் அமர்ந்து உறுதி கூறித் தேற்றும் பரிவுக் காட்சி அறிவுக் காட்சியில் அதிசயம் அருள் கின்றது.

முனிவர் எவ்வளவு ஆறுதல் கூறினும் தங்தையை கினைந்து கினேந்து நெஞ்சம் கெக்குருகி அழுத கண்ணய்ை இராமன் உருகி இருந்தான் என்பது மேலே குறித்த உாையால் தெரிகின்றது.

பெற்ற தங்தைபால் இக் குலமகன் கொண்டுள்ள போன்பு யாண்டும் வற்றாத வெள்ளமாய்ப் பெருகி யுள்ளது.