பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1601

வாழ்க்கையை அருவருத்து வெறுத்திருக்கின்றான். உலகபோகங் கள் யாவும் இவன் எதிரே கசந்து போயின.

‘மணிமகுடம் புனேந்து மன்னர் மன்னவனுய் அாசுபுரிய உரிய முன்னவன் என்னுல் இன்னலுற நேர்ந்தானே! ‘ என்று இப் பின்னவன் மறுகி யுருகி மயங்கி உயங்கி உறுதி ஒன்றும் காணுமல் உள்ளம் கியங்கி உழல்கின்றான்.

குல பாம்பரையாய் வருகின்ற அரசுரிமை மூத்தவனுக்கே உரியது. அம்முறை தவறலாகாது; தவறின் கிறை இழந்த மங்கைபோல் அந்த அரசு கிலை இழிந்து கெடும்.

டபெண்ணுக்குக் கற்பைப்போல் அரசுக்கு முறை என இக் குரிசில் குறித்தது கூர்ந்து ஒர்ந்துகொள்ளம்பாலது.

உனக்கு உரிய அரசை எனக்கு அளிப்பது ஒர் உத்தம பத்தினியைக் கற்பழித்தது போலாம் என அண்ணன் முன்னிலை யில் விநயமாக இவன் விண்ணப்பித்திருக்கிருன். எண்ணங்கள் துண்ணிய கிலையன ; கருத்தான்றி உணரும் குறிப்பு கலங்க ளுடையன.

அாசைப் பருவமங்கையோடு ஒப்பவைத்தது அரிய பெரிய போகங்களுக்கு உரிய கிலையமா யிருக்கும் இனிமை கருதி.

L யாண்டும் என்றும் எல்லாரும் கிறை காத்து வரும்படி இறை காக்கும் நீ ஈண்டு முறைகாக்க வேண்டும் என்பது குறிப்பு.

மகளிர்க்கு கிறை, கவத்திற்குப் பொறுமை; அறத்திற்கு அருள்; அரசுக்கு முறை உயிர் கிலையமாம்.

அரசுமுறையை விளக்க இவ்வரிசைகள் வந்தன.

கற்பு, பொறை, கருணைகளை எடுத்துக்காட்டி முறையைக் குறித்துள்ளமையால் அதன் கிறையும் நீர்மையும் அறியலாகும்.

அருள் இல்லாத அறம், பொறை இல்லாத தவம், கிறையில் லாத மகளிர், முறை இல்லாத அரசு, உயிர் இல்லாத உடல்போல் இழிந்து ஒழிந்துபோம் என்பதாம்.

இதனைத் தெளிந்து அருள்புரிய வேண்டும் என்பது கருத்து. திே மன்னர் நெறிபுரி யாரெனில், மாதர் கற்பிலர் மாதவர் நோன்பிலர்; சாது மாங்தர் தருமம் தழைத்திலர்: ஓத ர்ேகிலம் ஊனம் அடையுமே!

201