பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1626 கம்பன் கலை நிலை

என்னும் எதுப் பெயரால் எத்தப் பெற்றாள். தவமகிமை வாய்ந்த அந்தத் தருமபத்தினி சீதையைக் கண்டு உவந்து பேணிள்ை. நீதிநெறிகளையும் கணவனைக் கருதிஒழுகும் கற்பு நலங்களையும் L-Ja போதித்தாள்.

சானகியினுடைய குணகணங்களை வியந்து தனக்குக் கெய் விகமாய்க் கிடைத்துள்ள மணியணிகளையும் பட்டாடைகளையும் கொடுத்தாள். விலைமதிக்க முடியாத அணிகலன்களை அப்பெரியவள் வாரி வழங்கிய பொழுது இப் பெண்ணாசி தன் நாயகனே நயந்து நோக்கினுள். ‘ தவ மூதாட்டி தருவதை விரைந்து பெற்றுக் கொள்க ’’ என்று இக் கோமகன் குறிப்பித்தான். அக் குலமகள் வணங்கி வாங்கிக் கொண்டாள்.

செல்வச் சீமாட்டி ஆதலால் காட்டில் வங்தாலும் அரிய

பொருள்கள் வலிய வந்து சேருகின்றன என்று இாாமன்

குறு நகையுடன் மனைவியிடம் பரிகாசம் புரிந்தான்.

உரியவளை அடைந்து உடைமைகள் பெருமை அடை கின்றன ‘ என முனிவர் பதில் மொழி பகர்த்தார்.

உறவுரிமையுடன் இவ்வாறு உணர் அரைகளாடி அனைவரும் உவந்திருந்தார். ‘அன்று அங்கே தங்கி யிருந்து மறுகாள் எழுந்து மாதவரிடம் விடைபெற்று இராமன் தென்பால் வன்தான்.

அன்ன மா முனியொடு அன்றவண் உறைந்து அவன் அரும் பன்னி கற்பின் அகசூயை பணியால் அணிகலன் துன்னு துாசினெடு சங்திவை சுமங்த சனகன் பொன்ைெடேகி உயர்தண்டக வனம் புகுதலும். எல்லார்க்கும் பொன்னையும் பொருளேயும் அள்ளிக் கொடுக் கும் அாசகுமரி இங்கே முனிவர் மனைவியிடம் அணிஆடைகளைப் பணிவுடன் பெற்றுள்ளாள். சனகன் பொன் எனச் சீதையைக் குறித்திருக்கும் வாசகம் வாசம் கமழ்த்தி தேசு மிகுந்துள்ளது.

நல்ல ஞான சீலனை அம் மான மன்னன் கண்மணி எனப் பொன் உயிர் எனப் போற்றி வளர்த்த அருமை மகள் கணவன் பின்னே இன்று கானகம் நடக்கும் கரும கிலையை கினைந்து உரிமை தெரிய உாைத்தார்.

அர்தத் தவபத்தினியின் குணாலங்களையும் மன கிலைகளையும்