பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1652 கம்பன் கலை நிலை

தவர்களைத் திவினையாளர் என வெறுத்து வெகுண்டு கண்டித்து வருகிறாய் ! இது கியாயமா ? நேர்மையா? என வினேகமான கேள்விகள் இங்கே விளைந்திருக்கின்றன.

எல்லாம் தெய்வச்செயல் எனச் சொல்லித் தம் பொல்லாச் செயல்களையும் அவன்மேல் புகுத்தப் பார்க்கும் வல்வாயர் சொல்லைப்போல் இது தொனித்து வந்துள்ளது.

கடவுள் நிலை.

கடவுள் பட்சபாகம் அற்றவர் ; எல்லாவுயிரும் யாவும் அவர்க்குச் சமம் , யாரிடமும் ஒரே கருனே கோக்குடையவர். சீவர்களது பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி அவை பலன் களை அனுபவிக்கின்றன. அப் பலபோகங்களுக்கு அவர் சாட்சி யாய் கிற்கின்றார். காட்சி யளவே சிவ சாட்சி ஆகின்றார்.

சூரியன் ஒளியில் மனிதர் கல்லனவும் செய்கின்றார் ; அல் லனவும் புரிகின்றார். யாரையும் எதையும் செய்யும்படி அவன் யாதும் தாண்டுவதில்லை. அதுபோல் பாஞ்சோதியான இறை வனும் இருக்கின்றான். புண்ணிய மூர்த்தி ஆதலால் பாவிகள் அவனது அருள் கிழலை அடைய முடியாமல் அயலே அகன்று பரிதபிக்கின்றனர். கல்வினையாளர் தாமாகவே அவன் கருனே மருவி உரிமையுடன் மகிழ்கின்றனர். ஆகவே கொடியவர் க்குக் கொடியவன் போலவும், இனியவர்க்கு உரியவனுகவும்.அவன் எண்ணப்படுகின்றன். உண்மையில் எவரிடமும் அவனுக்குப் பகையும் உறவும் இல்லை. உயிர்களின் தன்மைக்குத் தக்கவாறே அவன் யாண்டும் தகவுற்று கிற்கின்றான்.

‘ கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்

உள்வழி உடையை இல்வழி இலேயே ; போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும், மாற்று ஏமாற்றல் இலேயே நினக்கு மாற்றாேரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்று அது போற்றுகர்ப் பெறினே.

(பரிபாடல். 4)