பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1308 கம்பன் கலை நிலை

வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் தோள்வலி குழ்ச்சி என்றாங்கு இருவகைத் தொகையிற்றாகும் ; ஆள்வலித் தானே யார்கட்கு ஆதியது அழகிது ஏனும் கோள்வலிச் சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணமதென்றான். (5)

(சூளாமணி, மங்கிரசாலேச் சருக்கம்)

  • -

உமைக்கு நாதன் ஆகியர் எனச் சமைத்த தோள்வலி தாங்கி னராயினும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதலே அாசர்க்கு எம்ம மாம் என்றது இப்பகுதியிலிருந்து தோற்றி யிருக்கிறது.

புவி காக்கும் மன்னன் மத்திரிகளுடைய உணர்வுரைக்குச் செவி சாய்க்கவேண்டும் என்பதாம்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேக்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (குறள், 389)

அமைச்சர் சொல் அாசன் செவியில் தங்கின், உலகம் அவன் குடைக் கீழ்த் தங்கும் என்ற இது இங்கே சிக்கிக்கக் தக்கது.

6. அன்பு மிகவும் சிறக்கது. எல்லா உயிர்களிடத்தும் இாக்கமுடையவன் உயர்ந்த தெய்வத் தன்மையை அடைகின் முன். கருணையே இறைவனுக்கு உருவமாம்.

(என்புகோல் உடையார் என்றது முனிவரை. பட்டினி கிடந்து ஊனே உருக்கி உயிரைப் பெருக்கி அருங் கவம் புரிதலால் அவரது வடிவ கிலை இங்ாவனம் குறிக்க நேர்ந்தது

‘ உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்,

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர். ‘

(திருமுருகாற்றுப்படை) என வங்கிருத்தல் காண்க. 1இலார் என்றது இல்லத வாசிகளை.) துறவிகளும் இல்வாழ்வோரும் கம் புலன்களை அடக்கி அருந்தவம் புரிவதினும் ஆருயிர்கள்பால் அன்பு புரிந்து வருவது நலம். தோல் உடையார், இலார் என்றது முறையே மானுடரையும் தேவாையும் குறிக்கதாகக் கொள் ளிலுமாம்.

அன் பின் அல்லது. ஒர் ஆக்கம் உண்டாகுமோ ?

உயிர்களிடம் அன்பு செய்யின் அறம் வளரும் ; அகளுல் அரிய பொருள்கள் பலவும் பெருகிவரும். வாவே இருமையும்

இன்பமாம் ஆதலால் அன்பே ஆக்கம் என்றார்.