பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1313

நிதியான கிறைநீருக்கு உடைகுளம் :

மிக்கான குல நெறிக்கோர் தினம் : மதியான மதிவிழுங்கும் கோளரவு : பவததுாறு வளாககும கானம ; கொதியான நரகிழுக்கும் கொடும்பாசம் : உயிர் உருக்கிக் குடிக்கும் கூளி : கதியான வழியடைக்கும் கற்பெருங்

கபாடம் அன்றாே கடிய காமம். (1)

சுகுடம் சேர் பரிமகநூாறியற்றி வானரசு கன்னற் சுவைபோல் பெற்றான்

சகுடம் போல் அவன்மனத்தில் சசிகாமம்

பிடித்தலேப்பத் தலைகீழாக

மகுடம்போய், வானகம்போய், வையகம் போய்,

அரசுபோய், மலைப்பாம்பாக

ககுடன்போய் வீழ்ந்தகதை அறியாயோ

சிறியாயோ நளினத்தாரோய் ! (குற்றலத்தலபுராணம்)

|

காமத்தின் கடுங்கேட்டைக் குறித்த இவ்வாறு பல நூல் களும் பரிந்து உரைத்திருக்கின்றன.

ஆதி ! மம்

காமம் உயிர்களுக்கு இயல்பானது மனித வாழ்க்கையில் அது இனிது மருவி யுள்ளது. அஃது இல்லையாயின் உலகம் இல்லை. தேவதேவரும் மங்கையனை மருவியே மகிழ்ந்திருக்கின் றனர். அங்கனம் இருக்கக் காமம் தீயது ; மனிதன் அதனே ஒழித்து ஒழுகவேண்டும் என்றது என்ன ? எனின், அதன் உண்மை நிலையை ஒர்ந்து உறுதிநலம் தெளிந்து உரிமை புரிக.

தீ மிகவும் கொடியது ; ஆயினும் அதனைப் பண்பாகப் பயன் படுத்தின் உண்டி முதலியன விளைத்து, ஒளி மிகப்பாப்பி உதவி புரிந்து வருகின்றது. அதுபோல் காமமும் உரிய மனைவியை மருவி முறை வழுவாமல் கிறைபுரிந்துவரின் இருமையும் இதமாம்; அயல் மனே முதலியன விழைந்து இயல் வழுவின் வீடு பற்றிய ப்ேபோல் அழிதுயர் பெருகி இழிநாகமாகும்.

ஊழிமுதல் ஊழ்முறையாய் உயிரைத் தொடர்ந்துவருகின்ற காமத்திற்கு ஒரளவு வசம்பமைத்துப் பாரளவில் இவ்வண்ணம்

பகுத்து வைத்ததே யன்றி, உண்மையில் அதனை முற்ற ஒழித்த

165