பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1333

கவலையுமின்றித் தாங்கிக் கிடக்கின்றா யே! எனத் துடித்துசொன் ள்ை.

துன்பத் தொடர்பே தெரியாமல் இன்பமயமாயுள்ள அா சிக்கு என்றும் கீாாக இடர் முட்டக் தொடர்ந்தவள் இதம் ஊட்ட வங்கவள்போல் இப்படிப் பதமூட்டிப் பகர்ந்தாள்.

அச்சொல் காதில் விழவும் யாதும் பகருமல் படுக்கையில் இருந்துகொண்டே கைகேசி சிறிது கிகைத்து கைத்தாள். புன்னகை பூக்க அங்கன்னய வாயிலிருந்து அதுபொழுது வெளி வந்துள்ள வசனங்கள் அகிய சமுடையன. மதிகலங்கனிந்த அப் புனிதமொழிகள் ஒவ்வொருவரும் உரிமையுடன் உணர்த்து மகிழ வுரியன.

வெவ்விடம் அனேயவள் விளம்ப, வேற்களுள் தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் : அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பலர் : எவ்விடர் எனக்குவந்து அடுப்பது ஈண்டு ? என்றாள். (1)

பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும் உராவரும் துயரைவிட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்கெலாம் வேதமே அன இராமனைப் பயந்தஎற்கு இடர் உண்டோ ? என்றாள். (3)

(மங்கரை சூழ்ச்சி, 46, 47) இந்த இனிய மொழிகள் கைகேசியின் புனித உளத்தை எவ் வளவு தெளிவாக விளக்கி கிற்கின்றன.

‘ எனது அருமைக்குழந்தைகள் மிகவும் நல்லவர் ; நாயகன் தரும குணசீலன் ; நாட்டிலுள்ள குடிகள் எல்லாரும் யாண்டும் இனியாாய் ஒழுகி வருகின்றனர் ; பொதுமுறையான இவை கிடக்க வேதமே என்னும்படி கிே நிலையமான இராமனைப் பிள்ளையாக பெற்றுள்ள பெரிய பாக்கியசாலியாகிய எனக்கும் ஒரு இடர் உண்டோ ?’ என்று அாசி இவ்வாறு. பேசியிருக்கிருள். உரைகளில் அவளுடைய உத்தம நிலைகளும் சித்த விருத்தி களும் ஒளிவிட்டு கிற்கின்றன.

தெவ் அடு சிலக்கை என்டசிறுவர் என்றது பகைவரை வெல்ல வல்ல வில்லுகளைக் கைகளில் தாங்கியிருக்கின்ற என்னு டைய பிள்ளைகள் என்றவாறு. தெவ் = பகைவர்.