பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1340 கம்பன் கலை நிலை

சூழ்ச்சிபுரிந்து உயர்ந்து உன்னைக் காழ்ச்சியாகக் கள்ளப் பார்க் ன்ெருள். நீ ஒன்றையும் உணர்ந்து கொள்ளவில்லையே என்று கூனி உருப்புனைந்து கூற அாசி அதற்கு மறுப்புரைக்கபடியிது.

என் கணவனே, அரசர் எல்லாரும் அடி கொழுகின்ற சக் கரவர்த்தி , நான் பெற்ற பிள்ளையோ, சொல்லுகற்கு அரிய பெரிய புகழுடைய பாகன் ; இருவகை கிலையிலும் இங்கனம் பெரும் பாக்கியசாலியாகிய என் வாழ்வைக் காட்டிலும் கோசலை வாழ்வு எதில் உயர்ந்தது : யோசனையின்றி உளறு கின்றாயே!” என்று கைகேசி கூனியை இடித்துக் கூறிள்ை.

கைகேசியின் நெஞ்சம் கொஞ்சம் இங்கே வெளியே தெரி ன்ெறது. இாாமன் பால் உயிரும் உள்ளமும் உருகியிருந்தாலும், கோசலைமீது சிறிது பொருமையும் கடுப்பும் உடையளாய் இருக் துள்ளமையை வாய்ச்சொல் வெளிப்படுக்கி யுள்ளது.”

இந்த உள்ளப் பான்மையை உள்ளறிந்துள்ளமையினல்ே தான் கோசலை வாழ்வை உயர்க்கிப்பேசி மாசில்லாக மனக்கைக் கூனி அசைக்க நேர்ந்தாள்.

எவ்வழியும் யாதும் அசையாமல் இாாமன்மீது போன்பு

மனடிப் பெருசை கொண்டுள்ள தாய்மையான தாய்மை உள் ளத்தை மெல்ல அசைக்து வைத்து மேலே இசைக்க மூண்டாள். மூட்டியுள்ள முறையைப் பாட்டில் பார்க்க.

ஆடவர் நகையுற, ஆண்மை மாசுறத்,

தாடகை எனும்பெயர்த் தைய லாள்படக்

கோடிய வரிசிலே இராமன் கோமுடி

சூடுவன் நாளே வாழ் விதெனச் சொல்லிள்ை.

-- (மந்தரை சூழ்ச்சி, 5.0)

கூனி கண்ணுக்கு இராமன் எப்படித் தோன்றியிருக்கின் ருன் ! அரிய போர் விரனேக் கிழவி இவ்வாறு இழிவாக எண்ணி அதனை வெளியிலேயும் துணிந்து சொல்லிவிட்டாள்.

தேவரும் புகழ் யாவரும் மகிழ அமிர்த வடிவய்ை அவதரித் துள்ள இனிய இராமன் கூனிக்கு மட்டும் தனியே சுவைமாறி வேறுவகையாய்க் தழைத்து கிற்கின்றன். அங்கிலை கன் பழமை யான கல்ைமையின் தக்தியை நலமுற விளைத்து வருகின்றது.