பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1361.

அங்கிலைமையைக் கிழவியின் வாயிலாக உலகறிய வெளியிட்டிருக் கும் அழகும் அருமையும் விகய மிக வுடையன.

இந்தப் பாத்திரம் இவ்வளவு பெரிய உண்மையைச்சொல்ல

நேர்ந்தது இடம் காலங்களின் இசைவினலேயாம்.

பெறல் அரும் திரு என்றது அரச செல்வத்தை. கருவிலே

யே திருவுடையார்க்கு அன்றி வேறு. எவரும் முயன்று பெற முடியாது ஆதலால் அப்பெற்றி தெளிய வக்கது.

அம்மா கைகேசி ! இராமனே இனியன் என்று இப்பொழுது எண்ணியிருக்கிறாய் ! நாளே அாசன் ஆல்ை அவன் அரியய்ை கின்று ஆற்றும் இன்னல்களை நீ அறியலாகும்.

2. மகனேக் குறித்து முதலில் இப்படிப்பேசினுள் ; பின்பு தாயை எடுத்துக்கொண்டாள். தன் மகன் அரசுக்கு வந்தால் உன் சக்களத்தியான கோசலையின் பெருமித நிலைகளை எ வர் அளத்து சொல்லவல்லார் : உலகம் முழுவதும் அவளுடைய உடைமையேயாம். சக்காவர்த்தியின் தாய் என்று அரசரும் அவளை மதித்துக் கொழுவர். குடிகள் அனைவரும் அவளது அடிகளையே வணங்குவர்.

உனக்கும் உன் மகனுக்கும் இங்கு என்ன உரிமை உன்னே யார் மதிப்பார் ? உண்னும் சோறும் உடுக்கும் உடையும் அவள் கொடுத்தால் அன்றி உனக்கு ஒன்றும் இல்லையே? இதை கினேக் கும்போதெல்லாம் என் நெஞ்சம் எரிகின்றதே ! எங்கள் கேகய தேசத்து மன்னன் மகளுக்கா இந்த இளிவும் பழியும் எய்தவேண் டும் : தெய்வமே என்று கொஞ்சம் தேம்பி அழுதாள்.

3. வறுமையால் வாடி உன்னிடம் வந்து ஏதாவதுவேண்டி யாசித்தவர்களுக்கு நீ என்ன செய்வாய் கோசலையிடம் போய்த் தான் இழிந்து கின்று யாசித்து வாங்கிக் கொடுக்கவேண்டும். உறு கின்ற இளிவுகளையும் துயாங்களையும் அவமானங்களையும் யோ சித்துப் பார் !

அவளை வேண்டி ஈகியோ வெள்.குதியோ ? விம்மல் நோயால், மாண்டு போதியோ f மறுத்தியோ ? எங்ஙனம் வாழ்கி ? ? என்றது கொடுக்க முடியாமல் கவிக்க நேர்கின்ற அல்ல ம்பாடுகளே குறித்துக் காட்டியபடியிது.

171