பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f密 நூல்கள் அடிகளார் பாடஞ் சொல்வதிலும் சொற்பொழிவாற்று வதிலுமே காலத்தைக் கழித்துவிட்டதால் நூல்கள் இயற்று வதில் கருத்து செலுத்தவில்லை. இருப்பினும், அவ்வப் போது மலரும் மாலேயும் போலத் தனிப்பாடல்கள் பலவும் தொகுப்புப் பாடல்கள் ப ல வ ம் இயற்றியுள்ளார்கள். இவற்றுள் சில அச்சேறின; மற்றவை எ ன் ன வா யி ன எனத் தெரியவில்லை அச்சேறின. வற்றுள், தி ல க வ தி அம்மை துதி, ஞான தேசிகமாலே என்பவை குறிப்பிடத் தக்கவை. - அடிகளார் தனியாக நூல் எழுதவேண்டியதில்லை. அவர்கள் அவ்வப்போது ஆற்றிய சொற்பொழிவுகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து அவ்வப்போது வெளியிட் டிருந்தாலேயே நூற்றுக்கணக்கான நூல்கள் தோன்றி யிருக்க முடியும். இதனை யாரும் செய்யவில்லை; அடிகள" ரும் தூண் டவில்லை. இந்தக் காலத்தில் பத்து நிமிடநேரம் ஒரு சிலர் வானெலியில் பேசிலுைம் உடனே அந்தப் பேச்சு ஒரு தனி நூலாக வெளியிடப்பெற்று அவர் எழுதி யுள்ள நூல்களின் எண்ணிக்கையில் இடம் பெற்றுவிடு கிறது. இந்தச் சூது வாது அப்போது அடிகளார்க்கோ அடிகளாரைச் சார்ந்திருந்தோருக்கோ தெரியவில்லை. இ ந் த த் திட்டத்தை அப்போது தொடங்கியிருந்தால், அடிகளாரின் ஒ வ் .ெ வ ா ரு சொற்பொழிவும் ஒரு பெரு நூலாக உருவெடுத்திருக்கும். ஐயகோ-என்செய்வது! இது நடைபெருததால் தமிழ்மக்களும் வாய்ப்பு இழந்தார்கள் -தமிழ்மொழியும் வளம்பெறமுடியாது போயிற்று-அடி களாருக்கும் பிற்காலத்தில் விளம்பரம் இல்லாதுபோயிற்று. இருப்பினும் இந்தக் குறைபாட்டை ஒரறிஞர் ஓரளவு நீக்கியுள்ளார். உ. ய ர் தி ரு மு. இராசாக்கண்ணஞர்