பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்ந்தாற்போல் ெத டர் ந் து சொற்பொழிவாற்றும் பேராற்றல் படைத்தவர் அடிகளார். பெருந் தலேவர்கள்பெரும்புலவர்கள் பலரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுப் பெருமையுறுவர் தமிழ்நாடு முழுவதும் அன்பராயினர் பலர், எ ங் க ள் ஊருக்கு வரவேண்டும். எங்கள் ஊருக்கு வரவேண்டும் என வேண்டி அன்புடன் அழைத்துச் சென்று சொற்பொழி வாற்றச்செய்து கேட்டு மகிழ்வர். அடிகளாரின் தலைமையில் பேசாத பெரும் புலவர்கள் இல்லை எனலாம்; அடிகளார் தலைமை தாங்கிப் பேசாத பெருங் கழகங்களும் இல்லே எனலாம். அடிகளார் இட்ட பணிகளே அன்புடன் செய்வதைத் தம் வாழ்நாளில் பெற்ற பெரும் பேருகக் கருதியோர் பலர். அடிகளார்க்குத் தம் அன்புக் காணிக்கையாகப் பழ வகைகளைக் கூடை கூடையாகக் கொண்டு வந்து குவித் தவர் பலர். ஒருவரோடொருவர் ேபா ட் டி போட்டுக் கொண்டு தாமே வலிந்து சென்று அடிகளார்க்கு விசிறி விசிறுவதைத் தம் பிறவிப் பெ ரு ம் ப ய ஞ க க் கருதி இறுமாந்தவர் பலர். மணிக்கணக்கில் அடிகளாரின் திரு முன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்து உரையாடி உவகைக் கடலில் திளைத்துச் செம்மாந்தவர் பலர். இத்தகு பெருஞ்சிறப்புகட்குரிய பெருமகளுர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்? பிறப்பு வளர்ப்பு கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருநாகேசுரம் என்னும் திருப்பதியில், சீமுக ஆண்டு வைகாசித் திங்கள்