பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புல்லின் இதழ்கள்

உன்னைக் கேட்காமலே ஏதோ காரணம் கூறி மறுத்து விட்டேன். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் நல்லது என்று உனக்குத் தோன்றுகிறதா? நீ என்ன நினைக் கிறாய்?”

“நான், எனக்கென்று எதையும் நினைத்துப் பார்ப் பதில்லை. என்னையே நான் உங்களிடம் முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட்ட பின்; எனக்கென்று நினைக்கவோ மறுக் கவோ சொந்தமாக என்ன இருக்கிறது? நீங்கள் என்ன எண்ணுகிறீர்களோ, எதை விரும்புகிறீர்களோ அதையே என் ஆயுள் உள்ளவரை செயலாக்கிக் கொண்டிருப்பேன். உங்கள் இதயத்தில் இடம் பெற்ற அன்றே உங்கள் குடும் பத்தில் ஒருவனாகிவிட்டேன். நீங்கள் என்னைப் பிரித்து அபிப்பிராயம் கேட்பதை எண்ணி என் மனம் வேதனை யடைகிறது’ என்றான் ஹரி.

-ஹரி, உன்னை நான் பிரித்துப் பேசவில்லை. உன்னை இனி என்னிடமிருந்து பிரிக்க யாராலும் முடியாது. ஆயினும் என் மனதில் தோன்றிய சந்தேகத்தைக் கேட் டேன்; அவ்வளவுதான். பெண்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க இஷ்டப்படாதவன் நான். அவர்களுக்குச் செல விடும் நேரம் வீண் விரயம் என்பது என் கருத்து. திருமண மாகிற வரை தங்கள் பெண்ணுக்குச் சங்கீதமும் கொஞ்சம் தெரிந்திருக்கட்டுமே என்று வருகிறவர்களுக்கு ஆசானாக விளங்க நான் தயாராயில்லை. சங்கீதத்தை அவ்வளவு மலிவாக்கி விலை பேசவும் நான் விடுவதில்லை. எனக் கென்று ஒரு கொள்கை வைத்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு; இல்லையா? அந்த உரிமையை நான் உன் தலை யிலும் சுமத்தி என் கொள்கைகளை உன்கையில் ஒப்படைத்து விட்டேன். அதைக் காப்பாற்ற வேண்டியது உன் இஷ்டம்’ என்று கூறி முடித்தார்.

குருநாதர் கூறியதைப் பதிலே பேசாமல் ஹரி கேட் டான். பாகவதரே மீண்டும், உன்னோடு இன்று மத்தி