பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வாரிசு 115

சுந்தரி சமையல் வேலைகளைத் துரிதமாக முடித்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், பாகவதர் வெளியி லிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அவர் கூடவே, வேறொரு சங்கீத வித்துவானையும் அழைத்து வந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். அவரது தோற்றமும் சிவந்த மேனியும், தும்பைப்பூப் போன்ற தலைமுடியும் நீண்டு வளர்ந்த தாடியும் அவர் பழுத்த பழம்

என்பதைக் காட்டின.

‘ராயர் வாள் வீட்டுக்குப் போயிருந்தபோது எதேச் சையாக ராமையாப் பிள்ளையவர்களைப் பார்த்த்ேன். நம்முடைய அதிர்ஷ்டம், பிள்ளையவர்களைச் சந்திக்கிற பாக்கியம் கிடைத்தது. இவர் முன் ஹரியைப் பாடச் சொல்ல வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. பிடிவாத மாக அழைத்து வந்து விட்டேன்’ என்று சுந்தரியிடம் பாகவதர் கூறினார்.

ஹரியின் பாட்டுக்கு உடனடியாக ஏற்பாடாயிற்று. அறையிலிருந்த பட்டு ஜமக்காளத்தைக் கொண்டு வந்து நடு ஹாவில் விரித்தாள் வசந்தி. ஹரி தம்புராவை நாலரைக் கட்டைக்குத் துல்லியமாகச் சுருதி சேர்த்துக்கொண்டு உட்கார்ந்தான். குருநாதரையும் பிள்ளையவர்களையும் வணங்கிவிட்டுப் பாட ஆரம்பித்தான். ஸாவேரி வர்ணத்தை அவன் நாலு காலம் வெகு கச்சிதமாகப் பாடி நிறுத்திய வுடனே பிள்ளையவர்கள் தம்மையும் மீறி, சபாஷ்! சபாஷ்!’ என்று வஞ்சனையில்லாமல் வாய் திறந்து கூறினார். அதன் பிறகு ஹரி பாடிய ஒவ்வொரு கிருதியும், ராக ஆலாபனையும், ஸ்வரம் பாடுகிற பந்தாவும் பிள்ளை யவர்களைப் பரவசப் படுத்தின.

மைனாக் குருவி போன்ற அவனது சாரீரத்திலிருந்த ஜிலுஜிலுப்பையும், முற்றிய மாதுளையிலிருந்து உதிர்ந்