பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வாரிசு 119.

‘தப்பில்லைதான். ஆனால் நான் உன்னை ஒன்று கேட்பேன்; கோபித்துக் கொள்ள மாட்டாயே?’’

நிச்சயம் மாட்டேன்.’

அப்படியானால் உன் கொள்கையைச் சுந்தரி தலை யில் ஏன் திணிக்கவில்லை?”

பாகவதர் வாய் மூடி மெளனியாகிவிட்டார். பிள்ளை யவர்களின் இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்க வில்லை விதிவசத்தால் நேர்ந்த விஷயத்துக்கு அவர் எப்படி விளக்கம். கொடுக்க முடியும்? -

  • சுப்பராமா, போனது போகட்டும்; ஆராதித்து, ஒரு பெண் தெய்வத்தின் கருணையால் அடையப்பெற்ற இவ் வித்தையை, அந்த இனத்திற்கே மறுப்பது நியாயமாகாது. இப்போது உன் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது, அவள் பேச்சிலிருந்து தெரிகிறது. யாராக இருந்தாலும், ஆர்வமுள்ளவர்களைத் தடுக்கலாகாது. ஆகவே வசந்திக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஹரியின் பொறுப்பு. அதற்கு வேண்டிய நேரத்தை நீதான் அவனுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். கற்றுக்கொண்ட வித்தை அவளுக்கும் ரசிகர் களுக்குந்தான் சொந்தம். அதாவது, யோக்கியதையும் திறமையும் அடைந்தால் தொழில் செய்யட்டும். இல்லா விட்டால் சுவாதுபவமாக இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது நாம் யோசிக்கக்கூடாது; நம்மால் முடிவு சொல்லவும் முடியாது. அது அவ்வளவு முக்கியமல்ல’ என்று பாகவதரிடம் கூறிக்கொண்டே வந்த பிள்ளை யவர்கள், வசந்தியின் பக்கம் திரும்பி, ‘ என்னம்மா, நான் சொல்லுவது சரிதானா? உனக்குச் சம்மதந்தானா?’ என்று.

கேட்டார்.