பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 151.

விடுங்கள். என்ன யோசிக்கிறாய்? நான் சொல்லுவது சரிதானே?”

சரிதான். போனால் சுந்தரி கூட நீங்கள் சொல்வது போல் சந்தோஷப்படுவாள். ஆனால் : இங்கே உங்களை எப்படித் தனியாக விட்டுப் போவது?’’

  • அசடு மாதிரி பேசாதே. நான் இங்கே தனியாகவா இருக்கிறேன்? படுக்கையில் விழுந்த பிறகு ராஜோபசாரம் அல்லவா நடக்கிறது? தினம் என்னைப் பார்த்துப் போக எத்தனைப் பேர் வருகிறார்கள்! பேசாமல் போய் வா. ஹரியும் உன் பெண்களும் இருக்கிறார்கள்: கவனித்துக் கொள்வார்கள். நிம்மதியாக நீ இரண்டு நாள் இருந்து விட்டு வா’ என்று மனைவிக்கு உத்தரவு கொடுத்து வசந்தியோடு சேர்த்து அனுப்பினார்.

அம்மா போன பிறகு, வீட்டு வேலை முழுவதும் காயத்திரி தலைமேல் விழுந்தது. ஹரி குருவுக்குப் பணி விடை செய்வதும், குடும்பத்துக்கு வேண்டிய காரியங் களைச் செய்வதும், அரங்கேற்றத்துக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்வதுமாக நேரம் போதாமல் திணறி னான். சுசீலாவுக்கோ ஹரியை விரட்டிக் கொண்டிருப் பதற்கே நேரம் போதவில்லை.

ஹரி சாப்பிட்டு முடிந்ததும் கையலம்பிவிட்டு வந்தான். சாப்பிட்ட எச்சிலைக் காயத்திரி சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். தேய்க்க வேண்டிய காலியான பாத்தி ரங்கள் ஒரு பக்கம் குவிந்திருந்தன. அம்மா இருந்தால் இப்படி இவ்வளவு வேலைகளையும் போட்டுவிட்டுச் சுசிலா வெளியே போயிருக்கமாட்டாள். ஆனால் அம்மா இல்லா தது அவளுக்கு எல்லா விதத்திலும் கொண்டாட்டமாகி விட்டது. இனிமேல் காயத்திரிதான் அவ்வளவு பாத்திரங் களையும் தனியாகத் தேய்க்கவேண்டும். அதன் பிறகு அடுக்களையைக் கழுவிவிட்டுத் தேய்த்த பாத்திரங்களை