பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 புல்லின் இதழ்கள்

கொட்டாவிகளை விட்டாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள்; எழுந்து நடமாடிப் பார்த்தாள் புஸ்த கத்தை விரித்து வைத்துக்கொண்டு படித்துப் பார்த்தாள் கையில் இருந்த புஸ்தகம் அவளையும் அறியாமல் நழுவிக் கீழே விழுந்தது. அதை அலமாரியில் கொண்டு வைக்கிற சாக்கில் அந்த அறையிலிருந்து பூனை மாதிரி நழுவியவள் பிறகு அங்கே வரவே இல்லை. அவள் சேஷ்டைகளை ஆரம்பத்திலிருந்து கவனித்த ஹரியும் காயத்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்,

‘அவள் இங்கே சாயங்காலத்திலிருந்து என்ன செய் தாள்? பேசாமல் அவளை எட்டு மணிக்கே அனுப்பியிருக் கலாம்’ என்றாள் காயத்திரி.

உடனே ஹரி, ‘ஆ! நாமாக அனுப்பினால், ! உங்க ளுக்கு மட்டும்தான் பொறுப்பா? எனக்கு இல்லையா?'’ என்று நம்மிடம் படையாகச் சண்டைக்கு வந்து விட மாட்டாளா!’ என்று கூறியபோது பாகவதர் இருமினார்.

சங்கிலி மாதிரி அதைத் தொடர்ந்து பல இருமல்கள் வந்தன. அது அடங்குவதற்குள் மிகவும் களைத்துப்போய் விட்டார். உடம்பு குலுங்க குலுங்க இருமியதில் விழிகளில் நீர் வழிந்தது. அருகில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்த ஹரியைப் பார்த்து, மணி என்ன?’ ‘ என்று

கேட்டார்.

பிறகு இரண்டு மணி நேரங்களுக்கெல்லாம் மீண்டும்

நெஞ்சுவலி பெரிதாக வந்துவிட்டது. ஹரி, உங்கம்மா எங்கேடா?’ என்று பாகவதர் முனகினார்.

ங் “நீங்க ள் சொல்லியனுப்பினபடியே, அம்மாவும் எல்லாரும் காலையில் வந்துவிடுவார்கள்’ என்று சமா

தானம் கூறினாள் காயத்திரி.