பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 புல்லின் இதழ்கள்

திரும்பினாள். சுசீலாவினால் பொங்கி வந்த அழுகையை அடக்க முடியவில்லை.

‘பஜனை மடத்தில் தம்பூராப் போடறத்துக்குன்னு ஒருத்தர் இருக்காரே, உங்களுக்கேன் சிரமம்? இந்த மாதிரி வழக்கமில்லாத வழக்கமெல்லாம் செய்யலாமா? பத்துப் பெரிய மனிதர்களும், வித்துவான்களும் வந்து கூடுகிற இடம் அல்லவா அது?’ என்றார். சகோதரி களுக்கும் அப்போதுதான் தங்களுடைய தவறு புரிந்தது.

மணி ஏழு அடித்தது. அடுக்களைக் காரியங்களை யெல்லாம் முடித்துக் கொண்ட லட்சுமியம்மாள் கணவருக்கு ராத்திரிக்கு வேண்டிய ஆகாரத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த அறையில் கொண்டு வந்து வைத்தாள். சுந்தரியும் அங்கு வந்தாள்.

அவளுடைய அழகையும் அன்றைத் தோற்றத்தையும் கண்ட பாகவதருக்கு, இறந்த கால நினைவுகள் வந்தன. காயகல்பம் சாப்பிட்ட மாதிரி வயதினால் தீண்டப்படாத அவளுடைய உடற்கட்டையும், அழகையும் கண்டு மனம் பூரித்தார். இந்தக் கோலத்தில் அவர் சுந்தரியைக் கண்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன. காரணம், அவள் வீட்டை விட்டு இம்மாதிரிப் பொது இடங்களுக்கென்று எப்பொழு தாவது புறப்பட்டிருந்தால்தானே!

பாகவதரும் அப்படியெல்லாம் அவளைத் தம்முடன் புதிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போகிற வழக்கம் இல்லை. இன்று அவளை அலங்கார பூவிதையாகப் பார்த்த போது அவர் மனம் பெருமையால் பூரித்தது. லட்சுமியம்மாளைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. என்றுமே அவளுக்கு அவருக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பதிலேயேதான் இன்பம். சுந்தரி மட்டும் இப்படி இருக்கிறாளே என்கிற பொறாமை மனப்