பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவின்றி வேறில்லை 167

பான்மையோ, ஒப்பிட்டுப் பார்க்கும் சுபாவமோ அவளுக்கு இல்லை. அதனாலேயே அவரால் அத்தனைகாலம் இரண்டு குடும்பங்களையும் ஏற்று நிம்மதியாக நடத்த முடிந்தது.

வாசலில் இரட்டை மாட்டு வண்டி பூட்டித் தயாராக நின்று கொண்டிருந்தது. ஹரி குருவின் பாதங்களை வணங்கி விட்டு எழுந்திருந்தான், கண்களில் நீர் துளித்தது. பாகவதர் லட்சுமியைக் கூப்பிட்டார். கச்சேரிக்குப் போகும் போது அவர் அணியும் பீதாம்பரத்தையும் சில்க் ஜிப்பாவையும் கொண்டு வரச் சொன்னார். “இவற்றை எல்லாம் போட்டுக் கொண்டு வா’ என்று பணித்தார்.

வியப்புத் தாங்க முடியாமல் தயங்கிக் கொண்டிருந்த ஹரியின் கையில் கொடுத்து, ஊம். சீக்கிரம் ஆகட்டும்’ என்று துரிதப்படுத்தினார். அழகே உருவான ஹரி அவற்றையெல்லாம் போட்டுக் கொண்டு எதிரே வந்து நின்ற போது, நமக்கு இந்த வயதில் ஒரு மகன் இருந்தால், அவனும் இப்படித்தானே ஹரியைப் போல் இருப்பான்’ என்று லட்சுமியம்மாளின் மனம் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஹரி லட்சுமியம்மாளையும் சுந்தரி யையும் சாஷ்டாங்கமாக வணங்கினான். மாடத்தில் இருந்த விபூதியை ஹரியின் நெற்றியில் இட்டு, “முருகன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார். உன் குருவைப் போலவே மகாவித்துவானாகப் பிரகாசிக்கப் போகிறாய்’ என்று ஆசிர்வதித்த போது லட்சுமியம் மாளின் விழிகளில் நீர் பெருகியது. சுந்தரியைப் போல் அவளுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாது என்பதைப் பாகவதர் அறிவார். ஆனால், ஏறத்தாழ அவரும் லட்சுமியின் நிலையில்தான் கலங்கிய கண்களுடன் இருந்தார்.

இதற்குள், அண்ணா!’ எ ன்ற உற்சாகமான அழைப்பைக் கேட்டு எல்லாரும் திரும்பி பார்த்தனர்.