பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. அரங்கேற்றம்

விழித்துக்கொண்ட சிறு குழந்தை தொட்டிலிலிருந்து தலையைத் தூக்கிப் பார்ப்பது போல; பாகவதர் கட்டிலில் படுத்தபடியே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார். எதிரே வண்டிக்கார நாகசாமி பணிவோடு நின்று கொண் டிருந்தான்.

அவுங்களெ யெல்லாம் கொண்டு போய்ப் பத்திரமா பஜனை மடத்திலே விட்டுட்டேனுங்க” என்று அவன் சொல்லும் போதே பாகவதருடைய உள்ளத்தில் திடீ ரென்று ஒரு யோசனை தோன்றியது. ==

நாகசாமி, கச்சேரி ஆரம்பமாகிவிட்டதா?’’ என்று பரபரப்புடன் கேட்டார்.

“இல்லீங்க இன்னும் அரை மணி ஆவும் போலே இருக்கு. கலெக்டர் வந்துதான் ஆரம்பிச்சு வெக்கப் போறாராம்; அவரும் அவர் சம்சாரமும் வர்ரதுக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க’ என்றான் நாகசாமி.

‘ரொம்பக் கூட்டமோ?’

அதை ஏன் எசமான் கேக்கிறீங்க? பஜனை மடத் தெருவைத் தாண்டி, வடக்குத் தெருவெல்லாம் ஒரே கும்பல். தெக்கேத் தெருவிலேயே வண்டி நின்னுப் போச்சு. அப்பாலே, ஐயா, அம்மா எல்லாம், இறங்கிப் போறதுக்கே ஜனங்கள் வழி விட மாட்டேன்னுட்டாங்க. யாரோ ஒருத்தர் வந்து தம்பூராவை வாங்கிக்கிட்டு, பாடற வங்களுக்கு வழியை விட்டாத்தானே கச்சேரி செய்ய